எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 3- மாருதி நிறு வனம், சென் காரின் விற்ப னையை நிறுத்தியதில் இருந்து அதன் புதிய மாடலை டிசைன் செய்து வருகிறது.தற்போது, அந்நிறுவனம் டிசைன் செய்த மாடலுக்கு ஒய்1கே என்ற கோடு எண் வழங்கியுள்ளது.

இந்த மாடல், அந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவின்போது அறிமுகப்படுத்திய கான்செப்ட் விசன் எஸ் என்ற மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாடல் கார், ஆல்டோ காருக்கு சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகி றது. இந்த கார் அல்ட்ரா ஸ்மால் எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) ரக காராக விற்பனைக்கு வரவுள் ளது.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த காரை குறைந்த விலை மாட லாக கொண்டு வர மாருதி நிறு வனம் திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் இதன் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் அறிமுகப்ப டுத்திய விஷன் எஸ் கான் செப்ட்டில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் அந்நிறு வனம் செய்யாது என எதிர் பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் ஏற் கெனவே அறிமுகப்படுத்திய இக்னீஷ் காருக்கு வாடிக்கை யாளர்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்தது. பலர் ஹேட்ச் பேக் - எஸ்யூவி ரக காரின் கிராஸ் ஓவர் டிசைனை அதிகம் விரும்புகின்றனர். இதனால் அந்நிறுவனம், சென் காரையும் கிராஸ் ஓவர் டிசைனில் உரு வாக்கியுள்ளது. மார்கெட்டில் காம்பெக்ட் எஸ்யூவி ரகங்க ளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் சிறப் பாக விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த காரும் அதிக மாக விற்பனையாகும் என தெரிகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner