எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 6- பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் அய்ந்தாண்டு பதவிக் காலம் செப்டம்பர் 9ஆ-ம் தேதி யுடன் நிறைவடைவதால் அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடை பெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அதிபர் வேட்பாளராக  பல் மருத்துவ ரான டாக்டர் ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டார்.

பாகிஸ்தான் மக்கள் கட் சியை சேர்ந்த அய்ட்ஜாஸ் அஹ் ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இசுலாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டனர்.

பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த 430 உறுப் பினர்கள் மற்றும் மாகாணங் களின் சட்டசபை உறுப்பினர் கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய வாக்குப் பதிவு மாலை நிறைவடைந்தது. நாடாளுமன்றத்தில் பதிவான 430 வாக்குகளில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளை பெற்றார். மவு லானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும், அய்ட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகளையும் பெற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner