எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, ஜன.1 ‘கோவை செஸ் மேட்ஸ்’ சார்பில் நடந்த, சர்வதேச தரத்துக்கான செஸ் போட்டிகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களது திறமைகளை நிரூபித் தனர்.

கோவை செஸ் மேட்ஸ் சார்பில், கணபதி மணியகாரம் பாளையம், சிறீ கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில், 10ஆவது சர்வதேச தரத்துக்கான செஸ் போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கின; இன்று நிறைவடைகின்றன. உலகளவில், 1,600 தரவரிசை புள்ளிகளுக்குட் பட்ட, 508 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், குஜராத் மாநில வீரர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் போட்டிகளில், ஒன்பது ரவுண்டுகளில் வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று முன் தினம் முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன.

நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப்போட்டிகளின் முடிவில், நான்கு புள்ளிகள் பெற்ற

16 பேர்; 3.5 புள்ளிகள் பெற்ற, 14 பேர் ஆறாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் விஜயராகவன் கூறு கையில், ‘’கோவை செஸ் மேட்ஸ் சார்பில், 10வது செஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறைந்த பட்சம், 5 வயதுடைய வீரர் முதல், அதிகபட்சம், 83 வயது வீரர் வரை போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

‘’மேலும், போட்டிகளில், 70 சதவீதம் வரை இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதால், சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள வீரர்களுடன் விளையாடுவதால், கோவை வீரர்களின் திறன் அதி கரிக்கும்.

‘’போட்டிகளில் வெற்றி பெரும் வீரர்களுக்கு, 115 பிரிவு களில், மூன்று லட்சம் ரூபாய் வரை பரிசு தொகை வழங்கப் படுகிறது,’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner