எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடிஸ் அபாபா, செப். 6- எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந் திருப்பதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப் பதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை தலைவர் கூறுகையில், “நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்ற இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழைக் காலத்தில் குப்பைமேடு சரிந்ததில் 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்

பாரீஸ், செப். 6- உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய் கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள் ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வ தேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமை யான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது. அதுகுறித்த ஆய்வு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner