எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமராவதி, செப்.6 மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆந்திர முதல்- அமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமராவதியில் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச் சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரணமில்லை. பண மதிப்பு நீக்கம் மிகப் பெரிய தோல்வி யாகும். ஏனென் றால் மக்கள் இன்று வரை பாதிக்கப் பட்டு இருக் கிறார்கள்.

மத்திய அரசின் தவறான கொள்கை யால் கடந்த ஒன்றரை ஆண்டு களாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தால்தான் பொருளா தார வளர்ச்சி நிலையாக இருக்கும். பெட் ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும்.

இது நாட்டை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள் ளார்.


பா.ஜ.க. தலைவர் நன்றி

மேனாள் பிரதமர் வாஜ்பேயி மறைவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் அனுப்பிய இரங்கல் செய்திக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner