எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.3 பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம்  சிறுதொழிற் சாலைகள் மூடப்பட்டு விட்டன என காங்கிரசு கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

கருநாடக மாநில காங்கிரசு மேலிட  பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரசு பொதுச் செயலாளருமான வேணுகோபால் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதித்துள்ளது.   நள்ளிரவில் 500, ஆயிரம் ரூபாய் நோட் டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு  நடந்த கொடுமைகளை நாடே அறியும். குறிப்பாக வங்கிகளிலும், ஏடிஎம்  மய்யங் களிலும் காத்து கிடந்தவர்களின் எண் ணிக்கை அதிகம். இவ்வாறு வரிசையில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் உயிரை இழந்தனர். அதே நேரம்  பணம் படைத்தவர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்கவில்லை.  கார்ப் பரேட்  நிறுவனங்களின் பாதுகாவலர்போல் பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு அவர் களை  பாதுகாத்தார். ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக  தமிழகத்தில் 50 ஆயிரம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுபோல்  ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சாலைகள் முடக்கியுள்ளன. இந்திய பணத்தின்  மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.  இவ்வாறு நாட்டின்  ஒட்டுமொத்த வளர்ச்சி குன்றிய நிலையில் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது  என்று பொய் உரையை மத்திய அரசு பரப்பி வருகிறது. இதை நாட்டு மக்கள் தற்போது  உணர்ந்து விட் டனர். படித்த இளைஞர்களை பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று  கூறிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் உரிய பதில்  அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner