எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 3- பாலஸ்தீன அகதிக ளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வரும் அய்.நா.வின் பிரிவுக்கு அளிக்கப் பட்டு வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்து வதாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலஸ்தீன அகதிகளுக் கான அய்.நா. பிரிவு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அமைப்பிடமிருந்து உதவி பெறுவோர் வரைமுறையோ, முடிவோ இல்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

அந்த அமைப்பு செயல்படும் விதமோ, அது நிதியைக் கையாளும் விதமோ சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் செயல்படுவதைப் போலவே அந்த அமைப்பு எப்போதும் செயல்பட் டுக் கொண்டிருக்கிறது.

யுன்ஆர்டபிள்யூஏ-வின் செயல்பாடு களை நன்கு ஆய்வு செய்த அமெரிக்க அரசு, அந்த அமைப்புக்கு இனியும் உத விகள் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. அந்த அமைப்பின் தோல் வியினால் அப்பாவி பாலஸ்தீனர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது.

யுஎன்ஆர்டபிள்யூஏ-வின் முக்கிய உறுப்பு நாடுகள், பிராந்திய நாடுகள், உதவியளிக்கும் நாடுகளும் அமைப்பில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை.

பாலஸ்தீனச் சிறுவர்கள் எங்கு வசித் தாலும், அவர்களுக்கு பேரிடர் கால அடிப்படையில் உதவிகள் அளிக்கப்படு வதைவிட மிகச் சிறந்த முறையில் உத விகள் அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக, அமைப்பின் உறுப்பு நாடுகள், உதவியளிக்கும் நாடுகளுடன் இணைந்து புதிய செயல் முறைகளை யும், அணுகு முறைகளையும் உருவாக்க அமெரிக்கா பாடுபடும் என்றார் ஹெதர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான அய்.நா. உதவி அமைப்புக்கு பெரும்பான்மை உதவிகளை அளித்து வந்த அமெரிக்கா, திடீரென உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்த அமைப்பை சிக் கலில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்குக் கரை, காஸா, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளில் அகதிகளாக வசிக்கும் 5 லட்சம் பாலஸ் தீன அகதிகளுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை யுஎன்ஆர்டபிள்யூ அளித்து வருகிறது.

ஆண்டுதோறும், இந்த அமைப்பு 700 பள்ளிகள் மூலம் 5 லட்சம் குழந்தை களுக்கு கல்வியும், 9 லட்சம் நோயாளி களுக்கு சிகிச்சையும் அளித்து வருகிறது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருள் களையும் அந்த அமைப்பு அகதிகளுக்கு அளித்து வருகிறது.

அந்த அமைப்புக்கு மிக அதிக அள வில் உதவிகளை அளித்து வந்த அமெ ரிக்கா, கடந்த ஆண்டு மட்டும் 12 கோடி டாலர் மதிப்பிலான உதவிகளை அளிப் பதாக உறுதியளித்திருந்தது.

எனினும், 6.5 கோடி டாலரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீரென நிறுத்தி வைத்தது. யுஎன்ஆர்டபிள்யூ அமைப்புக்கான நிதிப் பொறுப்பை அமெரிக்காவே சுமக்க முடியாது என வும், பாலஸ்தீனர்களாகக் குரல் கொடுக் கும் ஜோர்டான், எகிப்து, ஸ்வீடன், கத்தார், அய்க்கிய அரபு அமீரகம் போன்ற பிற நாடுகளும் போதிய அளவில் பங்க ளிப்பு வழங்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியது. இந்தச் சூழலில், தற்போது அமெரிக்கா தனது உதவியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது யுன்ஆர் டபிள்யூஏ-வை கவலையில் ஆழ்த்தியுள் ளது.

யுஎன்ஆர்டபிள்யூஏ-வுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு அய்.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட் டெரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner