எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, செப். 6- ஆகஸ்ட் 31 மற் றும் செப்டம்பர் 1ஆம் தேதியில் மாநில அளவிலான கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி கள் - (TKV விளையாட்டு திரு விழா 2018) இந்த போட்டிகளை தஞ்சாவூர் தடகளச் சங்கம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடத்தியது.

இப்போட்டியில் ஒவ்வொரு விளையாட்டிலும் 16 கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் கால் பந்து போட்டிகளில் முதலிடத்தையும், கூடைப்பந்தில் இரண்டாமிடத் தையும் பெற்று தமது பல் கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இவர்களைப் பல் கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் பேரா.செ.வேலு சாமி, பதிவாளர் முனைவர் பேரா சொ.ஆ.தனராஜ், முதன் மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் விளையாட்டு துறை இயக்குநர் முனைவர் பேரா.ரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner