எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.8 மூத்த பத்திரிகையாளர் கவுரி லங் கேஷ் படுகொலை செய்யப் பட்டு ஒரு ஆண்டு நிறைவ டைந்தது. அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு கோ ரிக்கை மனு அனுப்பி வைக் கப்பட்டது.

மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளது. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளின் வழி காட்டுதலின்படி செயல் பட்டுள்ளனர்.

இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரையும் படு கொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங் காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத் தன்மை, மரியாதை, அரசியல மைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம் தலை முறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


ஹர்திக் படேல் போராட்டத்திற்கு

யஷ்வந்த், சத்ருகன் ஆதரவு!

அகமதாபாத், செப். 8 படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, படேல் சமூக இளைஞரான ஹர்திக்படேல், காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகிறார். குஜராத் தலைநகரான அகமதாபாத் நகரத்தில் 11 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹர்திக்படேலின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போய்க் கொண்டி ருக்கிறது. இந்த பட்டினிப் போராட்டத்தில், தான் இறந்துபோகலாம் என்று கருதி, தனக்குப்பின் தன்னுடைய உடமைகள் யாருக்குச் சேர வேண்டும் என்று உயில் ஒன்றையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹர்திக் படேல் தயார் செய்துள்ளார். இதனால் குஜராத் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான- படேலின் இந்த  பட்டினிப் போராட்டத்திற்கு, காங்கிரசு, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரசு, ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும், ஹர்திக் படேலை நேரில் சந்தித்து அவரது போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடன் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, பாஜக முன்னாள் முதல்வர் சுரேஷ் மெகரா, மகாராஷ்ராவைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. நானா படேல் ஆகியோரும் சென்று படேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். பாஜக-வுக்கு எதிரான போராட்டத்திற்கு பாஜக-வின் மூத்த தலைவர்களே நேரில் சென்று ஆதரவு அளித்திருப்பது, குஜராத் பாஜகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner