எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சங்வோன், செப். 8- ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

தென்கொரியாவின் சங்வோ னில் அய்எஸ்எஸ்எஃப் உலக வாகையர் பட்டப் போட்டிகள் நடந்து வருகின்றன. வெள்ளிக் கிழமை நடைபெற்ற போட்டி களில் இந்திய இளம் வீரர் ஹிர்டே ஹசாரிகா 10 மீ ஏர் ரைபிள் டாப் பிரிவில் தங்கம் வென்றார். அதே நேரத்தில் இந் திய அணி புதிய சாதனையுடன் தங்கம் வென்றது.

ஹிர்டே ஹசாரிகா மட் டுமே ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் டாப் பிரிவு இறுதிக்கு தகுதி பெற்றார். 17 வயதான அவர் மொத்தம் 627.3 ஸ்கோ ருடன் ஈரான் வீரர் முகமது ஆமீரை வீழ்த்தி தங்கம் வென் றார். ரசியா வெண்கலம் வென் றது.

அதே நேரத்தில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், சிரேயா அகர்வால், மனினி கெஜசிக், ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1880.7 ஸ்கோருடன் புதிய சாதனை படைத்து தங் கம் வென்றது.

மேலும் மகளிர் தனி நபர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இள வேனில் வளரிவன் 249.8 ஸ்கோருடன் வெள்ளிப் பதக் கம் வென்றார். 228.4 ஸ்கோர் பெற்று சிரேயா அகர்வால் வெண்கலம் வென்றார். சீனா இதில் தங்கம் வென்றது.


 

யுஎஸ் ஓபன்: இறுதிச் சுற்றில் செரீனா-ஒசாகா

நியூயார்க், செப். 8- யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸ், -ஜப்பானின் ஒசாகா ஆகியோர் மோதுகின்றனர்.

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வரு கின்றன.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் வெள் ளிக்கிழமை நடைபெற்றன.

இதில் முதல் ஆட்டத்தில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம் ஸஹம், லாட்வியாவின் அனஸ் டசிஜா செவஸ்டோவாவும் மோதினர்.

அனஸ்டசிஜாவை 6--3, 6--0 என்ற நேர் செட்களில் வெறும் 6-6 நிமிடங்களில் வீழ்த்தி இறு திச் சுற்றுக்கு தகுதி பெற்றார் செரீனா.

அதே நேரத்தில் 22 ஆண்டு களுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் போட்டி அரையிறுதிக்கு முன் னேறிய ஜப்பானின் நவோமி ஒசாகா 6--2, 6--4, என்ற நேர் செட் களில் அமெரிக்காவின் மடிஸன் கீய்சை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெர்ற முதல் ஜப்பானிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஒசாகா.


எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை: ராணுவம், கடற்படை வெற்றி

சென்னை, செப். 8- எம்சிசி முரு கப்பா தங்கக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய ராணுவம், கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

92-ஆவது முருகப்பா தங்கக் கோப்பை ஆக்கி போட்டி எழும் பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நடை பெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மும்பை ஆக்கி சங்க அணிகள் மோதின.

இதில் 5--1 என்ற கோல் கணக்கில் ராணுவம் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை-பெங்களூரு ஆக்கி சங்க அணிகள் மோதின. இதில் 2--1 என்ற கோல் கணக் கில் கடற்படை வென்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner