எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முனிக், செப். 8- புதிதாக தொடங்கப்பட்டுள்ள அய் ரோப்பிய கால்பந்து கூட்ட மைப்பின் (யுஇஎஃப்ஏ) நேசன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் உலக வாகை யரான பிரான்சு, -ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

ரசியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி யில் பிரான்சு அணி வாகை யர் பட்டம் வென்றது. முன் னாள் வாகையரான ஜெர் மனி படுதோல்வியடைந்து வெளியேறியது.

இந்நிலையில் முனிக் நக ரில் இரு அணிகளுக்கு இடையி லான நேசன்ஸ் லீக் கால் பந்து ஆட்டம் நடைபெற்றது.

பிரான்சு கோல்கீப்பர் அல்போன்ஸ் இருமுறை ஜெர்மனியின் கோல் வாய்ப் புகளை தடுத்தார். அதே போல் பிரான்சு வீரர் கிரீஸ் மேன் கோல்கம்பம் நோக்கி அடித்த ஷாட்டை ஜெர்மனியின் மானுவேல் நியுர் தடுத் தார். இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner