எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 8- ‘முதலில் வாருங்கள், பணி முடித்து முதலில் செல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் மேலும் 51 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று பதிவுத் துறை அறிவித்து உள்ளது.

இது குறித்து அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதி வாளர்கள் உள்ளிட்டோருக்கு பதிவுத் துறை தலைவர் ஜெ. குமரகுருபரன் அனுப்பிய சுற்ற றிக்கை விவரம்: ஆவணங்க ளைப் பதிவு செய்வதற்காக முதலில் வந்தால் பணியை விரைந்து முடித்து முதலிலேயே சென்று விடும் புதிய திட்டத் தில் தொடக்கத்தில் இருந்த சிக்கல்கள் இப்போது களையப் பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, மேலும் 51 சார் பதிவாளர் அலுவலகங்க ளுக்கு வரும் திங்கள்கிழமை (செப். 10) முதல் இந்தத் திட் டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே சார் பதிவாளர்க ளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட் டுள்ளன. இது குறித்த பயிற்சி கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 575 அலுவலகங்களுக்கும் புதிய திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக வருவோர், புதிய திட்டத்தின்படி மொத்த மாக உள்ளே அனுப்பி வைக் கப்பட மாட்டார்கள். முதலில் வருவோர் சார் பதிவாளர் அலு வலகத்துக்கு உள்ளே அனுப்பி வைக்கப்படுவார். அவரின் பணிகள் அனைத்தும் முடிக்கப் பட்ட பிறகே, அடுத்த நபர் உள்ளே அனுப்பி வைக்கப்படு வார். இதன் மூலம், சார் பதி வாளர் அலுவலகங்களுக்குள் மொத்தமாக பொது மக்கள் நுழைவது தடுக்கப்படும் என பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


சாலைப் பணியாளர்கள் பேரணி

சென்னை, செப். 8- 11 அம்ச  கோரிக் கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் ஆயிரக்கணக் கானோர் கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 16 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாநில சாலைகளின் பராமரிப்பு அனைத்து தனியார் கான்ட்ராக் டர்களிடம் தமிழக அரசு கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி யாளர் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முக ராஜா தலைமையில் சங்க நிர்வாகிகள் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமனை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்க தலைவர் சண்முகராஜா கூறுகையில், ‘அரசு பணியிடங்களை ஒழித் திட வகை செய்யும் பணியாளர் கள் சீரமைப்பு குழுவை கலைத் திட வேண்டும். சாலை பராம ரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண் டும். 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை வழங்கிட வேண்டும். 41 பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணி யாளர்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண் டும்’ என்றார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner