எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,  செப்.10 தமிழகம் முழுவதும் 8.9.2018 அன்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத் தின் மூலம் 74,971 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பயனா ளிகளுக்கு ரூ. 179 கோடியே 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு "தேசிய லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றத்தை 2 மாதத்துக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.

மாநில அளவிலான லோக் அதாலத்தை அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்தும். இதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமை லோக் அதலாத் நடைபெற்றது. இதில் எளிதில் தீர்க்கப்படக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி, கடன் நிலுவை தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வைத்திய நாதன், எம்.வி.முரளிதரன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ் குமார், எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.ராஜ மாணிக்கம், பி.டி.ஆஷா, சுப்ரமணியம் பிரசாத், சி.சரவணன் உள்ளிட்ட நீதிபதிகள் தலைமையிலான 10 அமர்வுகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகள், மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் அமர்வுகள் என மொத்தம் 414 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 74,971 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ. 179 கோடியே 35 லட்சம் வழங்கப்பட் டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ரூ. 60 ஆயிரம் கோடி மருந்துகள் ஏற்றுமதி

உதகை, செப்.10 இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அதில் ரூ. 60,000 கோடி மதிப்பிலான தடுப்பு மருந்துகள் 200 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, இந்திய பார்மஸி கவுன்சில் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருந்தாக்கியல் தொடர் பான சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக உதகைக்கு வந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் 8.9.2018 அன்று தெரிவித்ததாவது: இந்திய பார்மஸி கவுன்சிலில் மருந்தாளுநர்களின் விவ ரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. மருந்தாளு நர்கள் தற்போது வரை மாநில பார்மசி கவுன்சிலில் மட் டுமே பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும், பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மூலம் மருந்தாளுநர்களின் விவரங்களை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், அரசும், பொதுமக்களும் கண்காணிக்க முடியும்.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20,000 கோடி மதிப்பிலான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், ரூ. 60,000 கோடி மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 200 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.

67 ஆயிரம் மய்யங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

சென்னை, செப்.10- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம்ஞாயிற்றுக்கிழமை (செப்.9) 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதிவரை நடை பெறும். அதற்கு ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா?, சரியாக உள்ளதா? என்பது போன்ற விவ ரங்களை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் 9 ஆம் தேதி மற்றும் வருகிற 23- ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

இந்த முகாமில் வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதிஅன்று 18 வயதை பூர்த்தி அடையக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழகத் தில் தற்போது 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சிறப்பு முகாம்களை இந்த வாக்குச்சாவடிகளில் நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதைப்போல் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.அனைத்து வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பெயர் சேர்க்க மற்றும் பெயர் நீக்க படிவங்கள் பெற்றுக் கொண்டு, உடனே பூர்த்தி செய்து விண் ணப்பித்தனர். மேலும் அந்த படிவங்களை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner