எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநெல்வேலி, செப்.11 திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலில் 1982-ஆம் ஆண்டு கொள்ளை அடிக்கப்பட்ட நடராஜர் சிலை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங் காட்சியகத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்ற புலன் விசா ரணைக் குழு இதனை கண்டுபிடித்துள்ளது.

கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் தொன்மையான அய்ம்பொன்னால் செய்யப்பட்ட இரண்டரை அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயர மாணிக்கவாசகர் சிலை, ஒரு அடி உயர பலி நாயகர் சிலை ஆகியவை கடந்த 5.7.1982-இல் கொள்ளையடிக்கப்பட்டன. நடராஜர் கோயிலின் இரும்புக் கதவின் பூட்டுகளை உடைத்து 4 சிலைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 1984-ஆம் ஆண்டு இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடித்து வைக்கப்பட்டது.

திருட்டுபோன நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் இச் சிலையை ரூ.30 கோடிக்கு விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் மீண் டும் விசாரணையை தொடங்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத் தரவிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner