எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கைலாசபுரம், செப். 11- இந்திய  பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் மாநில அள விலான வலைப்பந்து தெரிவு போட்டிகள் 3.9.2018 அன்று திருச்சி கைலாசபுரத்தில் உள்ள பாயிலர் ப்ளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.

ஆண்களுக்கான போட் டிகள் 14 வயதிற்குட்பட்ட, 17 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆகிய பிரிவு களில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு 14 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஒன்பதாம் வகுப் பைச் சேர்ந்த கே.ஆதித்யன், 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பனிரெண்டாம் வகுப்பைச் சேர்ந்த இ.நேருஆகாஷ், மற் றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவு களில் பதினோறாம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.மகாவிஷ்ணு ஆகிய மூன்று மாணவர்கள் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். போட்டிகள் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட   பிரிவுகளுக்கு சட்ஸ்கர் மாநிலத்திலும், 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளுக்கு மகாராஷ்ட்ரா   மாநிலத்திலும் நடைபெற இருக்கின்றது.

தேசியபோட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை யும் மற்றும் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner