எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை, செப். 11- பட்டுக் கோட்டை பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகமானதால் விலை சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலி டத்திலும், தமிழகம் இரண்டா மிடத்திலும் உள்ளது. வரும் காலத்தில் தமிழகம் முதலி டத்தை பெறும் அளவிற்கு தற் போது தென்னை சாகுபடி அதி கரித்து வருகிறது. தமிழகத்தில்  3.1 லட்சம் ஹெக்டேரில் (7.75 ஆயிரம் ஏக்கர்) தென்னை சாகு படி நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 45,000 ஹெக்டேரில் (1.12 லட்சம் ஏக்கர்) தென்னை சாகுபடி நடக்கிறது. அதிலும் குறிப்பாக  தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 37,000 ஹெக்டேரில் (92,500 ஏக்கர்) தென்னை சாகுபடி நடக்கிறது.

கோவை, பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேது பாவாசத்திரம் உள்ளிட்ட பகுதி களிலும் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் மொத்தத்தில் தேங்காய்  பயன் பாடு குறைவு. இதன் காரண மாக தற்போது 500 கிராமுக்கு மேல் உள்ள ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ரூ.13 முதல் ரூ.14க்கும், சில்லரை விற்பனையில் ரூ.15 முதல் 18க்கும் விற்கப்படுகிறது. 500 கிராமுக்கு கீழ் உள்ள ஒரு தேங் காய்  மொத்த விற்பனையில் ரூ.10 முதல் ரூ.12க்கும், சில் லரை விற்பனையில் ரூ.12 முதல் 14 ரூபாய்க்கும் விற்கப் படுகிறது. இதேபோல் ஒரு கிலோ கொப்பரை கடந்த வரு டம் ஜூலை, ஆகஸ்ட் மாதங் களில் ரூ.90 வரை  விற்கப் பட்டது. தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.97 முதல் 100 வரை விற்கப்படுகிறது. மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரை ரூ.67க்கு கொள்முதல் செய்கிறது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner