எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2016ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

6 - பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி சார்பில் அய்.ஏ.எஸ். தேர்வு வழிகாட்டு கருத்தரங்கு

6 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 9ஆவது பன்னாட்டு நாத்திகர் மாநாடு: 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, நார்வே நாட்டு மனிதநேயர் ராபர்ட் ரஸ்டட் ஆகியோர் மாநாட்டு இலச்சினையை திறந்து வைத்து மாநாட்டு நோக்கம் குறித்து உரையாற்றினர்.மாநாட்டை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் உரையாற்றியதுடன் மாநாட்டு மலரினையும் வெளியிட்டார்.

7 - திண்டுக்கல்லில் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை கூட்டம்

15, 16, 17.1.2016 - சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு விழா!

15  - தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தொடக்கம். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமையில் தமிழறிஞர் தமிழண்ணல் படத்தினை திறந்து வைத்தும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பறை இசைக் கலைஞர் மணிமாறன், திரையிசைப் பாடகர் மகிழினி ஆகியோருக்கு பெரியார் விருதும், நினைவுப் பரிசும் வழங்கி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

16 -  திராவிடர் திருநாள் (இரண்டாம் நாள் மாட்சிகள்) படத்திறப்பு - பாராட்டு விழா: இசைமுரசு நாகூர் ஹனீபாவின் படத்தினை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்துவைத்தார். (நாகூர் ஹனீபாவின் மகன் தி.மு.க. தலைமைக் கழக பாடகர் இசைமுரசொலி இ.எம்.ஹனீபா நவ்ஷாத் அலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்ந்தார்.)
பெரியார் விருது 2016: கவிஞர் யுகபாரதி, இசை அமைப்பாளர் தாஜ்நூர், எழுத்தாளர் இரா.முத்துக்குமார், மக்களிசைப் பாடகர் தலித் சுப்பையா ஆகியோருக்கு பெரியார் விருது 2016 வழங்கி பாராட்டப் பட்டது.

17- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்

24, 25, 26-1-2016 -  ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் எம்.என்.நஞ்சையா அரங்கத்தில் இரண்டாம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24, 25, 26.1.2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன.
27- அய்தராபாத் மாணவர் ரோகித் வெமூலா தற்கொலை: மத்திய அரசைக் கண்டித்து மாணவரணி சார்பில் ஆர்ப் பாட்டம்

பிப்ரவரி

27- அய்தராபாத் மாணவர் ரோகித் வெமூலா தற்கொலை: மத்திய அரசைக் கண்டித்து மாணவரணி சார்பில் ஆர்ப் பாட்டம்

3 - பேரறிஞர் அண்ணாவின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் - கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிதம்பரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

4 - தனியார் துறையில் இடஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் கோரிக்கை - 4.2.2016 அன்று புதுடில்லியில் பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் நீதியரசர் ஈசுவரய்யா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் துறையில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் குழு பரிந்துரையினை மத்திய அரசு சட்டமாக இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானிக்கப்பட்டது என ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்தார்.

23 - சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் உரை :  சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வியக மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவினை மிசோரம் மாநில மேனாள் ஆளுநர், அறக்கட்டளையின் புரவலர் ஆ.பத்மநாபன் தலைமையில் திராவிடர் கழகத் தலைவரும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் கி.வீரமணி அவர்கள்,

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காக, அவர்தம் உரிமைக்காகப் பாடுபட்ட சமூக விடுதலையாளர் டாக்டர் அம்பேத்கர்(Dr. Ambedkar - a Crusader for Human Rights and Emancipation of the suppressed sections for the society)
எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றினார். வெகுவாகப் பார்வையாளர்களை அவ்வுரை ஈர்த்தது.

மார்ச்

10 -  அன்னை மணியம்மையார் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! - அன்னை மணியம்மையார் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் கழகக் குடும்பத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

16 -  அன்னை மணியம்மையார் நினைவு நாள்!

19 - திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் திராவிடர் கழக மாநில மாநாடு, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு! திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் புரட்சியாளர் அம்பேத்கர் பந்தலில், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் முதல் நாள் மாநாடு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார். ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (பெரியார் பன்னாட்டமைப்பு, ஜெர்மனி) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழில் உரையாற்றினார்.

ஏப்ரல்

1 - சட்டமன்றத் தேர்தலும் - வாக்காளர் கடமையும் சிறப்புக் கூட்டம் - சென்னை பெரியார் திடலில் சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

7- பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

9-  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது: பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு 2015ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான வீரமணி விருதினையும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பன்னாட்டமைப்பின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கி சிறப்பித்தார்.

14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்!

18 - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை! தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் மறியல்! - திராவிடர் கழகம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தியதில் கழகத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் 50ஆவது முறையாக கைது செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

22- சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு புத்தகக் கண்காட்சிஉலக புத்தக நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் 22.4.2016 முதல் 24.4.2016 வரை சென்னை புத்தகச் சங்கமம் சிறப்பு புத்தகக் கண்காட்சியினை நடத்தியது. 22.4.2016 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் செர்கே கோட்டவ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

27 -  திருக்குறள் பள்ளிகளில் கட்டாய தனிப்பாடம் - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

27-  வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள் -நீதிக்கட்சி தோற்றுனர்களில் ஒருவரான வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 165-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை முன்பு உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர், தோழியர்களும் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா!

29- தமிழர் பண்பாட்டுப் புரட்சி விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 126-ஆவது பிறந்த நாள் விழா - 37-ஆம் ஆண்டு தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகங்களின் சார்பில் சென்னை மயிலை கவிக்கோ அரங்கில் மாநில ப.க. அமைப்பு செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரை ஆற்றினார்.

விருது பெற்றோர்: புரட்சிக்கவிஞர் விருது: (முதல் விருது) பாவலர் அறிவுமதி. பெரியார் விருது: சிங்கப்பூர் எழுத்தாளர் இரத்தின வெங்கடேசன் (பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்) புத்தகர் விருது: திருச்சி பொறியாளர் பட்டாபிராமன்

சிறப்புரை: கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர்  மணிகண்டன் விருதுகள் வழங்கி பேருரை: பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி

29- சென்னை - பெரியார் திடலில் ரஷ்ய நாட்டுத் தூதர் - சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அருங்காட்சியகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றை ரஷ்ய நாட்டுத் தூதர் திரு.செர்கே கோட்டவ் அவர்கள் பார்வையிட்டு பதிவேட்டில் தமது கருத்துக்களை பதிவு செய்தார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அருங்காட்சியகப் பதிவுகளை விளக்கியும், 1930-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் ரஷ்யப் பயணம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் - பழைய பதிவுகள் கணினிப் பதிவாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதை தெரிவித்தார்.

மே

7- மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

8 -  பெரியார் பிஞ்சுகளின் பழகு முகாம் தொடக்கம்!

13 -  பெரியார் பிஞ்சுகளின் பழகு முகாம்நிறைவு விழா - நிறைவு விழாவில் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரையும், பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரையும் வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிஞ்சுகளிடம் அளவளாவி அறிவுரை ஆற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர் வீ.அன்புராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

29-  புனே நகரில் உள்ள ஜோதிபாபூலே நினைவு இல்லத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் பழைய பூனே பகுதியில் லோகியா நகர் பகுதியில் அமைந்துள்ள ஜோதிபா பூலே அவர்கள் வாழ்ந்த இடம், பூலே அமைத்த பொதுக்கிணறு, ஜோதிபாபூலே - சாவித்திரி பாய்பூலே நடத்திய பெண்களுக்கான பள்ளி என பூலே அவர்களின் தொடர்புடைய இடங்களை கழகத் தலைவர் பார்வையிட்டார். பூலே மற்றும் சாவித்திரிபாய் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜூன்

3 - கலைஞரின் 93-ஆம் ஆண்டு பிறந்த நாள் - தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை: 93-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக நிர்வாகிகள், தோழர்கள் புடைசூழ வரவேற்று மகிழ்ந்து தந்தை பெரியார் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றனர். கலைஞர் மலர்வளையம் வைத்து தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை அளித்து கலைஞர் அவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. புதிதாக வெளியிடப்பட்ட இயக்க நூல்களையும் வழங்கினார்.

8- புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமிக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து - புதுச்சேரி மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

25- பெங்களூருவில் சமூகநீதிக் கருத்தரங்கம் -  பெங்களூருவில் கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நடத்திய பிற்படுத்தப்பட்டோர் நோக்கிடும் அறைகூவல் சமூகநீதி கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

ஜூலை

1- சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் - சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 -  மத்திய அரசின் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம்

2- 07-2016 முதல்  05-07-2016 வரை குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை- குற்றாலத்தில் 39-ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூலை மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை வீகேயென் மாளிகையில் நடைபெற்றது. 2-7-2016 அன்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் வகுப்புடன் தொடங்கியது.

104 ஆண்கள், 28 பெண்கள் பங்கேற்ற இப்பயிற்சி முகாமில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை.சந்திரசேகரன், பேரா.ப.காளிமுத்து, முனைவர் நம்.சீனிவாசன், முனைவர் நீலகண்டன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், முனைவர் அதிரடி அன்பழகன், தோழியர் யாழினி, தோழர் தாமரைக்கண்ணன், கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

4 மற்றும் 5ஆம் தேதிகளில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று வகுப்பெடுத்தும், மாண வர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் (கேள்வியும் கிளத்தலும்), நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கியும் மாணவர்களைப் பாராட்டியும் உரை நிகழ்த்தினார்.

4- நெல்லை மண்டல இளைஞரணி மாநாடு -  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வே.முருகன் நன்றி உரை ஆற்றினார்

5- தமிழர் தலைவருக்கு தமிழ் சமூகத்தின் ஒளி விருது! - நெல்லை மாவட்டம் சிவகிரி திருவள்ளுவர் கல்வி கலை மன்றத்தின் சார்பாக, ஒளிக்கு விழிகள் எடுக்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியை இர.சலோமி செசி தலைமையில் நடைபெற்றது. ஆனந்தப் பிள்ளை வரவேற்புரையும், திருவள்ளுவர் கல்வி கலை மன்றத்தின் இயக்குநர் வின்னரசு தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றிய அறிமுக உரையும் ஆற்றினர். மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் ஜெயராஜ் (எ) செழியரசு தமிழர் தலைவருக்கு விருது வழங்கப்படுவதின் சிறப்பினையும், மனோன்மணீயம் பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.எழில் சிறப்புரையும் ஆற்றினர். பள்ளி மாணவி சீ.டாரிஸ் ஜிந்தகி தமிழர் தலைவருக்கு அன்பு மடல் என தான் எழுதிய மடலை தமிழர் தலைவருக்கு அளித்தார்.

தமிழ் சமூகத்தின் ஒளி விருது வழங்கு விழா: அம்பேத்கர் சிந்தனை தூண்டலகம் அமைப்பின் சார்பில் தமிழர் சமூகத்தின் ஒளி விருதினை ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட பெண்கள் குழுவினர் வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்.

9- பானகல் அரசர் 150ஆம் ஆண்டு பிறந்த நாள்! - நீதிக்கட்சியின் அடிவேர்களில் ஒருவரும் சென்னை மாநில பிரதம அமைச்சராக சமூக நீதித் தடத்தில் சாகாச் சாதனைகளைப் படைத்த பானகல் அரசர் (எ) இராமராய நிங்கர் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, சென்னை தியாகராய நகரில் பானகல் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

15- பச்சைத் தமிழர் காமராசரின் 114-ஆவது பிறந்த நாள்! கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 114-ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல, மாவட்டக் கழகங்களின் பொறுப்பாளர்கள், தோழர் தோழியர் புடைசூழ, சென்னை பெரியார் மேம்பாலம் (சிம்சன்) அருகில் உள்ள அவரது சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட்
22-  சிங்கப்பூர் மேனாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் என்ற செல்லப்பன் இராமநாதன் தமது 92ஆம் அகவையில் மறைவுற்றார். கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டார். 24.08.16 அன்று சென்னையில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் தூதரக அலுவலகத்திற்கு கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மேனாள் அதிபர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செய்து குறிப்பேட்டில் இரங்கலைப் பதிவு செய்தார். தெனிந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் மேதகு ராய்.கோ அவர்களிடமும்  இரங்கலைத் தெரிவித்தார்.

22-  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பெயர் மாற்றம் - கழகம் ஆர்ப்பாட்டம் - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை என்.எல்.சி இண்டியா லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்வதைக் கண்டித்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என மீட்டுருவாக்கம் செய்ய வலியுறுத்தியும் நெய்வேலி தந்தை பெரியார் சதுக்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

28 - பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழக மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வழி காட்டுதல் உரை ஆற்ற ராமதுரை நன்றி உரை ஆற்றினார். தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுதல், புதிய கல்விக் கொள்கை திணிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

30 - காவிரி நதி நீர் உரிமை கோரி தமிழகத்தில் முழு அடைப்பு - கழகம் பங்கேற்பு  கழகத் தோழர்கள் கைது.
தொடர்ச்சி நாளை வெளிவரும்...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner