எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்யாறு, ஜன. 1- முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் அசனமாப்பேட்டை மானமிகு அ.இராசாராம் அவர்கள் தமது 96ஆம் வயதில் சொந்த ஊரில் நேற்று  (31.12.2016) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

செய்தியறிந்து செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோ தலைமையில் கழகப் பொறுப்பாளர்கள் விரைந்து சென்று மறைந்த பெரியார் பெருந்தொண்டருக்கு மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், கழக பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் மு.தமிழ்மொழி, வடமணபாக்கம் கிளைக் கழகத் தலைவர் மு.வெங்கடேசன், பொன்.சுந்தர், மளிகை எல்லப்பன், அசனமாப்பேட்டை வடிவேல், செய்யார் ஆறுமுகம், கோவிந்தன், கஜபதி, தங்கம் பெருமாள், நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் மற்றும் தி.க., தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner