எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இஸ்தான்புல், ஜன.1 துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, அய்ரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத் தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக் கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டி னரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இன்று பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட் டம், கொண்டாட்டத்துடன் உச்ச கட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்த போது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர் பட்டவர்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலை நடத்திய வனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக இஸ்தான் புல் ஆளுநர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதி பர் பராக் ஒபாமா, தேவையான அவசர உதவிகளை செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ள தாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner