எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஜன.1 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 5 மணியளவில் கிழக்கு கடற்கரை பகுதியில்  திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பூமி அதிர்ந்தது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் எழுந்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். தெருக்களில் தஞ்சம் அடைந்த அவர்கள் பாதுகாப்பான இடங் களில் தங்கினர். இங்கு 5.5. ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் 244 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்புகள், உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜப்பான் 4 பூமிதட்டுகள் இணையும் இடத்தில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 28-ந்தேதி டைகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் காயம் மற்றும் பாதிப்பு போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner