எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆயத்த ஆடைகள் வர்த் தகத்தின் மிந்த்ரா நாட்டில் மிகவும் விரும்பப்படும் அடை யாளமாக திகழும் எண்ட் ஆஃப் ரீசன் சேல் -இன் 5 ஆவது பதிப்புடன் 2017 ஆம் ஆண்டைத் துவங்க இருக்கிறது.

இது இந்தியாவின் மாபெரும் நாகரீக ஆடை விற்பனை ஆகும். இதில் 3.5 லட்சம் பொருட்கள் 50- முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி சலுகையில் கிடைக் கும்.

இச்சலுகை ஜனவரி 3- மற்றும் 5ஆம் தேதிகளில் இருக்கும். இதில் 2000 சர்வதேச மற்றும் இந்திய பிராண்டுகளின் பங்களிப் புடன், 25ஙீ விற்பனையாகும் என மிந்த்ரா எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து இந்நிறுவன தலைமை அதிகாரி ஆனந்த் நாராயணன் கூறியிருப்பதாவது:

நாங்கள் எங்கள் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு ஆச்சரிய மூட்டும் வாங்கும் அனுபவத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளோம் மற்றும் நாடு முழுவதும் 13000 க்கும் மேற்பட்ட பின்கோடுகளில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் விநி யோகம் செய்ய முடியும் அள விற்கு எங்கள் சரக்குப்பரிமாற்ற அணியை பலப்படுத்தி உள் ளோம்.

இந்த விற்பனையின் இறுதி யில் 50 இலட்சம் பொருட்கள் விற்பனை ஆகியிருக்கும் என எதிர்பார்க்கிறோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

துவரம் பருப்பு  விலை சரிவு

விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ.1,000, வத்தல் குவிண்டாலுக்கு ரூ.500, பாமாயில் டின்னுக்கு ரூ.20 விலை குறைந்துள்ளது.
தான்சானியாவிலிருந்து துவரை அதிக அளவில் வருவ தால் கடந்த வாரம் (100 கிலோ) மூட்டை ரூ.3,800 முதல் ரூ.4,000க்கு விற்பனையானது. நடப்பு வாரத் தில்  தான்சானியா துவரை மேலும் விலை சரிந்து ரூ.3,500 முதல் ரூ.3,800க்கு விற்பனையாகிறது.
கர்நாடகா குல்பர்க்கா துவரை யும் ரூ.5,300லிருந்து ரூ.5,000 என சரிந்துள்ளது. இதனால் துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ.1,000 விலை குறைந்துள்ளது. குண்டூர் வத்தல்  தினசரி 10 ஆயிரம் மூட் டை வரத்து துவங்கி உள்ளது. இதனால் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.500 குறைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner