எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொடர்ச்சியாக மூடிக்கிடந்த தால் ஏடிஎம் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க  இந்நிறுவனங்கள் முடிவு செய் துள்ளன.

பிரதமர் மோடி நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதை  தொடர்ந்து ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஏடிஎம்மில் நிரப்ப தேவையான பணம் இல்லாததால் நாடு முழு வதும் 90  சதவீத ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.

கடந்த ஒன்றரை  மாதங் களுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.

இதனால் நவம்பர் மாதம் மட்டும் ஏடிஎம் நிறுவனங்கள் சுமார் ரூ.475 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீட்டை சந்தித்து உள்ளது. டிசம்பர் மாதமும் அதே அளவுக்கு  இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதமும் சேர்ந்து மொத்தம் ரூ.1000 கோடி அளவுக்கு ஏடிஎம் நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்க இந் நிறுவனங்கள் முடிவு செய்துள் ளன. ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போதும் அதற்கு  உரிய கட்டணத்தை சம்மந்தப்பட்ட வங்கியிடம் வசூலித்து விடு கிறார்கள்.

ஆனால் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக ஏடிஎம்கள் முடங்கியதால் அவர்களின் வாழ் வாதாரம் முடக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஏடிஎம்களை அதிக  அளவில் கட்டுபாட்டில் வைத் திருக்கும் என்சிஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்ரோஸ் தஸ்தூர் இதுகுறித்து கூறுகையில், ரூபாய் நோட்டு செல்லாது  அறிவிப்பால் ஏடிஎம் நிறுவனங்கள், ஊழியர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற் காக மத்திய அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

ஏடிஎம்மின் பணப்பரிமாற்ற அமைப்பு மற்றும் சேவை கூட்டமைப்பு தலைவர் (எப் எஸ்எஸ்) பாலசுப்பிரமணியன் கூறுகையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்  எங்கள் வருமானம் ஒன்றும் இல்லை. ஆனால் செலவு மட்டும் 3 மடங்கு அதிகரித்து விட்டது. இருப்பினும் ஏடிஎம்களை புதிய ரூபாய் நோட்டுக்கு ஏற்ற வகையில்  ஏடிஎம்களை மறுசீர மைக்க கூடுதல் நேரம் பணியாற்றி இருக்கிறோம் என்றார். இதனால் மத்திய அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner