எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாகர்கோவில், ஜன.1 நாகர்கோவில் அருகே அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதாக ஆட்சியருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், வலை கம்பெனியில் சோதனை நடத்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குழந் தைகள் பாது காப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதி காரிகள், அந்த வலை கம்பெ னிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வலை கம்பெனியில் குழந்தை தொழி லாளர்கள் உள்பட 18 பேர் கொத்தடிமைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அங்கிருந்த 3 பெண் குழந்தைகள், 5 பெண்கள், 10 ஆண்களை மீட்டனர். மீட்கப் பட்டவர்கள் தமிழகம், ஒடிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மீட்கப்பட்ட 18 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். அப்போது தங்க ளுக்கு 3 மாதமாக சம்பளம் தரவில்லையென்றும், பெற் றோரிடம் பேச விடவில்லை. கம்பெனியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தங்களை தாக்கவும் செய்ததாக அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

இந்தத் தகவல் ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல் லப்பட்டது. மீட்கப்பட்ட 18 பேரையும் காப்பகத்தில் ஒப் படைக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து வடிவீஸ்வரம் பறக்கின்காலில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 பெண் குழந்தைகள் உள்பட 8 பேரையும் ஒப்படைத்தனர். ஆண்கள் 10 பேரும் அதே பகுதியில் உள்ள மற்றொரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளனர். இவர்கள் மீட்கப் பட்டது குறித்து இவர்களது பெற்றோருக்கும், உறவினர்க ளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்களிடம் இன்று மீட் கப்பட்டவர்கள் ஒப்படைக்கப் படலாம் என்று தெரிகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner