எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜன.1  கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்க மாநி லம், நாடியா மாவட் டத்தில் உள்ள கிரிஷ் நகர் பெண்கள் கல் லூரியில் மனாபி பண்டோபாத் யாய் என்ற திருநங்கை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு ஏற்ற 19 மாதங்களில் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால், தான் இந்த பதவியிலிருந்து விலகுவதாக மனாபி கூறியுள்ளார்.

இவர் பொறுப்பேற்ற பிறகு, கல்லூரியில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவி களின் போராட்டம் போன்றவை இவரது பதவி விலகலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

புதுப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப் பெண்ணை வரவேற்றும், ஒரு ஆண்டுக்குப் பிறகு, அவளை கொடுமை செய்து எரித்தும் கொல்வார்கள். தொடர்ச்சியான போராட்டங்களால் நான் சோர்வடைந்து விட்டேன். ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன்.

தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டது மிகவும் பெருமையாக பேசப்பட்டது.

முன்னதாக, 2003ஆம் ஆண்டு பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனாபி, அதே மாவட்டத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner