எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகப்பட்டினம், ஜன.1 வறட்சியால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகு வதைக் கண்டு மன வேதனையில் தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 12 விவசாயிகள் உயிரிழந்தனர். ஏற்கெனவே தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந் துள்ளனர்.

நாகப்பட்டினம் ஒன்றியம் ஆழியூர் அருகேயுள்ள கடம்பன் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந் தவர் ராமகிருஷ்ணன் மனைவி சரோஜா(67). 2 ஏக்கரில் சம்பா பயிர்கள் கருகியதால் உளுந் தாவது விதைக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மழை பொய்த்ததால் மன வேத னையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

கீழ்வேளுர் ஒன்றியம் ஆனை மங்கலம் ஊராட்சி ஓர்குடியைச் சேர்ந்த கலிய பெருமாள்(55). 2 ஏக்கர் நிலத் தில் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்கள் கருகியதைக் கண்டு, நேற்று காலை வயலிலேயே மாரடைப் பால் உயிரிழந்தார்.

திருமருகல் ஒன்றியம் கூத்தபத்தார்தோப்பைச் சேர்ந்த திருமாவளவன்(47),தனது 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருந்த சம்பா பயிர்கள் கருகிய நிலையில், நேற்று (31.1.2016) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

கீழ்வேளூர் ஒன்றியம் கடம் பங்குடியைச் சேர்ந்த வீரமணி (30), தனது 3 ஏக்கரில் சம்பா பயிரை பார்வையிடச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி நேற்று  (31.1.2016) முன்தினம் இரவு மரணமடைந்தார்.

வேதாரண்யம் அருகே சின்னதேவன்கோட்டையைச் சேர்ந்தவர். கணபதி(75). இவர், தனது 3 ஏக்கர் நிலத்தில் பயிர் கள் கருகியதால் மனவேதனை யில் நேற்று முன் தினம் மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதேபோல, பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த கோகுல வாசன்(72), 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி யதைப் பார்த்து மனமுடைந்த தில் நேற்று முன்தினம் மாலை மாரடைப்பால் இறந்தார்.

மயிலாடுதுறை அணீருகே சேமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (36). கருவாழக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவ ருக்கு சொந்தமான ஆறுபாதி யில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ததால் ரூ.1.30 லட்சம் கடனாளியானார். போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கிய தால் மனமுடைந்த அவர், வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏகனி வயலைச் சேர்ந்தவர் ஞான சுந்தரம்(64). தனது 5 ஏக்கரில் சாகுபடி செய்த நெற்பயிர் கருகிய நிலையில், நேற்று முன்தினம் நெஞ்சு வலி ஏற் பட்டு வயல் வரப்பில் மயங்கி விழுந்தார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதேபோல, மாங்காடு கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி சி.மாரிமுத்து(55), தனது வய லில் விதைத்திருந்த கடலை நீரின்றிக் கருகிய அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். கறம்பக் குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பிரே மானந்தன்(37) என்ற விவசாயி, குத்தகை நிலத்தில் உளுந்து பயிரிட்டு இருந்தார். வறட்சி யால் பயிர்கள் கருகிய நிலை யில், நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. புதுக் கோட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பிரேமானந்தன் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே கணபதி யேந்தலைச் சேர்ந்தவர் விவ சாயி கருப்பையா(45). மனைவி யின் நகைகளை அடகு வைத் தும், வட்டிக்குப் பணம் வாங் கியும் தனது 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். நீரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த அவர், நேற்று காலை வீட்டில் மயங்கி விழுந் தார். மானாமதுரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம் அருகே படர்ந்த புளியைச் சேர்ந்த பெ.சுப் பையா (44), தனது சகோதரர் களுடன் இணைந்து 30 ஏக்கரில் மக்காச்சோளம், 10 ஏக்கரில் உளுந்து, 10 ஏக்கரில் பாசிப் பயறு பயிரிட்டிருந்தார். மழையின்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று அதிகாலை மார டைப்பால் உயிரிழந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner