எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வார்தா புயலால் கடும்  சீரழிவுக்கு ஆளான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சீரமைப்புக்குப் பிறகு சனவரி 11இல் திறப்பு.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், செயலர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்தாண்டு ஒரு லட்சம். (தமிழ்நாட்டில் மட்டும் 2456).

இன்று முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4500 எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக பிபின்ராவத் பதவியேற்றார்.

இராக் தலைநகரம் பாக்தாத்தில் குண்டுவெடித்து 28 பேர் பலி!

டில்லி மாநில ஆளுநராக மேனாள் உள்துறை செயலாளர் அனில் பைஜால் பதவி ஏற்றார்.

பாம்பன் ரயில் பாலம் 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் நாளை மழை பொழிய வாய்ப்பு.

சனவரி 9ஆம் நாள் சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை.

குடும்ப அட்டையில் உள்தாள் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.

அருணாசலப்பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை ஆட்சி மாற்றம்.

ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பால் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு.