எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.1 இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சி னையைத் தீர்ப்பதற்காக அமைக் கப்பட்ட கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (31.1.2016) நடைபெற்றது.

இரு நாடுகளைச் சேர்ந்த மீன் வளத் துறை, கால்நடை வளர்ப்புத் துறை செயலா ளர்கள், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், கட லோரக் காவல் படையினர், இந்திய கடற்படையினர், தமி ழக அரசு அதிகாரிகள் இக்கூட் டத்தில் பங்கேற்றனர்.

நாள் முழுவதும் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீன்பிடிக்கப் பயன் படுத்தும் படகுகள், மீன் பிடிப் பில் இருநாட்டு மீனவர்கள் இடையே ஒத்துழைப்பை அதி கரிப்பது, கைது செய்யப்படும் மீனவர்களைக் கையாளுவது குறித்து முக்கியமாக விவாதிக் கப்பட்டது.

இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கொழும் பில் நாளை (1.1.2017) நடை பெறும் இந்திய -இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பான இருநாட்டு அமைச்சர்கள் நிலை யிலான பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. ஏனெனில், அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது ஓய்வில் இருந்து வருகிறார். எனினும், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.