எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைஜீரியா நாட்டின் அல் அஜிசியா பகுதியில் 1922 செப்டம்பர் 13 ஆம் தேதி வெப்ப நிலை 136 டிகிரி பாரன்ஹீட்தான் இதுவரை அதிகபட்சம் (57.8 டிகிரி செல்சியஸ்).

நாளைமுதல் 9 ஆம் தேதிவரை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 24 மணிநேரத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் மதுவின் விற்பனை ரூ.174 கோடியாம்! (‘‘பெருங்குடி’’ மக்கள் என்பது இதுதான் போலும்!)

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவினால் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இப்பொழுது சைக்கிள் தேர்தல் சின்னம் யாருக்கு என்பதில் போட்டா போட்டி நடக்கிறது.

கடைசியாக எடுத்த பட்டியல்படி தமிழ்நாட்டின் வாக்காளர்கள் தொகை 5.93 கோடி ஆகும்.

பொருள்களை வாங்கவில்லை என்று காரணம் காட்டி ரேசன் கார்டுகளை ரத்து செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வங்கி ஏ.டி.எம். குறித்த வழக்கினை மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான வீடுகளை வழங்கக்கோரி சென்னை மெரீனா அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் (712 வீடுகள் வழங்கப்படாமல் உள்ளன. ஏன் மனம் இல்லை?).

தருமபுரியில் கடும் வறட்சி காரணமாக யானைகளுக்குத் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஊற்று தோண்டும் பணியில் இறங்கியுள்ளனர். (இன்னும் கொஞ்ச நாள்களில் மக்களுக்காகவும் இதனைச் செய்ய நேரிடலாம்).

தரக்குறைவாக விமர்சனம் செய்யும் பா.ஜ.க.வினர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயவேண்டும் என்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner