எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘தென்னவன் சிந்தனைப் பேழை சர்வக்ஞர்’’ எனும் நூலினை கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த கவிமலர் வ.மலர்மன்னன் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்நூலுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் க.அன்பழகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் அணிந்துரை தந்துள்ளனர்.

176 பக்கங்களைக் கொண்ட இந்நூல் தந்தை பெரியார் அவர் களதுசிந்தனைவளத்தோடுசர் வக்ஞரின் சிந்தனைகளும் எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என் பதை ஒப்பிட்டு விளக்கியுள்ளது.

‘‘அந்தணரென்றுதம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் பிராமணர்கள், தமது வாழ்விய லுக்குரிய இலக்கணம் என்ன வென்பதை வகுத்துக் கொள்ள வேண்டியதுமிகமிகத்தேவை என்பதைச் சர்வக்ஞர் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்.

‘‘அந்தணராற் பெறுவது கல்வியறிவாம், வாய்மையின்

அந்தணர் இன்றேல் - கடிதல் கெடும்

இத்தரையும் காண் சர்வக்ஞ’’ (546)

என்பதோடு கல்வி அறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். வேதங்களைப் படிக்காமலே பிறர் வாய்க்கேட்டு, மனப்பாடம்பண்ணிஉச்சரிப் பதும்,பாடலாக்கிமந்திரமென ஓதும்அவர்கள் அவைகளின் பொருளறியாது,கற்றுணர்ந்தவர் கள் போல் தம்மை ஆரா தித்துக் கொள்வதும் வழக்கமான தென்றுணர்ந்த சர்வக்ஞர்,

‘‘கற்றார் பெறுவர்கோடி அற்றார்            அஃதிலார்

கற்றார் நாடாள்வர் நாளும் - பார்ப்பனர்

கற்றறிவின்றி கெட்டனரே சர்வக்ஞ’’             (547)

கற்றுணராமலே கெட்டு வாழ் கின்ற ஓரினம் பார்ப்பனர்கள் - பிறப்பொழுக்கம் குன்றியவர்கள். ஆனாலும், பிரம்மத்தில் பிறந்த வர்களாக, தம்மை ஆட்படுத்திக் கொள்பவர்களாகத் திகழ்வதிலே நாட்டமுடையவர்கள்.

‘பிறப்பில் பிரம்மனெனப்  பறப்பான்   பார்ப்பனன்

பிறரொப்ப பார்ப்பனனும்   காமச்சினத்துள் மூழ்கின்

பிறரினும் கீழாம் சர்வக்ஞ’’ (548)

மனத்தூய்மையற்று, புறத் தூய்மையால் பக்தியாடி, பகட்டு வாழ்வால் பொருளாடி, கடவுள் பேரால் உயர்ந்தவர்களாய்க் காமச்சினத்துள் மூழ்கி வாழ்வதும், குணமிலாராய்த் திகழ்வதும் வழக்கமாகக் கொள்பவர்கள் பார்ப்பனர்கள். அப்படிப்பட்ட பிரா மணர்கள் பிறரினும் கீழானவர்கள் என்கிறார் சர்வக்ஞர்.

‘‘உள்ளொன்று நினைப்பான்                புறமொன்றாய் இருப்பான்

பள்ளத்தில் யாண்டும்விழான் - நச்சுடை பார்ப்பனின்

கள்ளப்பாதையே வேண்டற்க சர்வக்ஞ’’ (549)

பார்ப்பனக் குலத்தில் பிறந்து சமத்துவத்தை நாடிக் கூடல சங் கம தேவனை வணங்கிய பச வண்ணர்....

‘‘பார்ப்பான் பிரம்மகொலை புரிவான்

தேவபக்தனுக்கு இவன் பொருத்த முடையவனா?’’

என்று கேள்விக்கணை தொடுத்த பசவண்ணர் வழியில் கருத்தூன்றிய சர்வக்ஞர் - வஞ்சிப்பதும், பிறர் பொருளைப் பறிப் பதும், பூசை வளர்த்துத் தமது பாவச் செயலுக்குப் பரிகாரம் காண்பதும் பார்ப்பனர்களின் குணமாக இருப் பதால், அவர்கள்மீது நம்பிக்கை வைப்பது பிறர்க்குக் கேடு என் கிறார் சர்வக்ஞர்.

பேசுவது பெரியாரல்ல சர்வக் ஞர் - கருநாடகத்துக் கவிஞர்.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner