எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.4. ‘வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, அமைச்சர்கள் மற்றும் மூத்த அய்.ஏ.எஸ்.,அதிகாரிகள்இடம் பெறும்குழுக்கள் அமைக்கப் படும்' என, முதலமைச்சர் பன் னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அறிக்கை விவரம் வருமாறு:

தமிழகத்தில், அக்., 1 முதல் டிச., 31 வரை, வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலத்தில் சராசரியாக, 440 மி.மீ., மழை கிடைக்கும். ஆனால், நடப்பாண்டு, 168.3 மி.மீ., மழையே கிடைத்துள்ளது. மாநிலத்திலுள்ள, 32 மாவட் டங்களில்,21இல்,60சதவீதத் திற்கும் அதிகமாக மழை குறைந்துள்ளது. இந்த மாவட் டங்களில், 40 சதவீதம் மட் டுமே வடகிழக்கு பருவமழை கிடைத்துள்ளது. மற்ற மாவட் டங்களில், 35- - 59 சதவீதம் மழை குறைந்துள்ளது. வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், மாநிலம் முழு வதும் வறட்சி நிலை உருவாகி உள்ளது.

மத்தியஅரசின்புதிய வழிகாட்டுதல் நெறிமுறைப் படி, நேரடி ஆய்வு செய்த பிறகே வறட்சி பாதித்த மாவட்டம் என, அறிவிக்க இயலும். எனவே, சென்னை தவிர பிற மாவட்டங்களை, நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரம் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி, ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மேற்பார்வையிட்டு, அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க, அமைச்சர்கள் மற்றும் மூத்த அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம்பெறும் குழுக்கள், உட னடியாக அமைக்கப்படும். இந்த குழுக்கள், வரும், 9 ஆம் தேதி வரை, மாவட்டங்களில் சுற்றுப்பயணம்செய்து,10 ஆம்தேதிஅரசுக்குஅறிக்கை அளிக்கும். அதன் அடிப்படை யில், வறட்சி பாதிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேவையான நிவாரணங்களை அரசு வழங்கும்; பயிர் பாதிப் புக்குரிய நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.

இது தவிர, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப் பீட்டு தொகை பெற இயலும். டெல்டா பகுதிகளில், 12.86 லட்சம் ஏக்கரில், 11.01 லட்சம் ஏக்கர் பயிர்கள், காப்பீடு செய்யப்பட்டு உள்ளன; இது, 86 சதவீதம். மொத்தம், 5.48 லட்சம் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையாக, 44.81 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். டெல்டா அல்லாத பகுதிகளில், 6.71 லட்சம் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்துள்ளனர். நெல் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் பாதிப்பு அளவை பொறுத்து, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு பெற இயலும். இதர பயிர்களுக்கு, பாதிப்பு அளவை பொறுத்து இழப்பீடு பெற இயலும்.

எனவே,விவசாயிகள் வறட்சி நிலை குறித்து எந்த வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.இந்தஇக்கட் டான சூழ்நிலையில் விவசாயி களை பாதுகாப்பது, தமிழக அரசின் கடமை.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner