எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 இல் தாக்கல்.

* கிராமங்களுக்கு 40 சதவிகிதம் பணம் கொண்டு செல்லப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை.

* குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ். - இணைய வசதியில்லாமலேயே) மூலம் ரயில் பயணச் சீட்டுப் பெறலாமாம். (அடுத்த மாதம் முதல்).

* தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.கள்) பணியிட மாற்றம்.

* சென்னை மந்தைவெளியில் ஓய்வூதியம் பெற வரிசையில் நின்ற சுப்பிரமணி என்ற முதியவர் (82) மயங்கி விழுந்து மரணம்.

* தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் பெண்களுக்கு  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக மார்பகப் புற்றுநோய் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தின் சார்பில் ‘தானபெக்ஸ்-2017’ அஞ்சல்தலைக் கண்காட்சி நாளை தொடக்கம் (இடம்: சென்னை- ஷெனாய் நகர், அம்மா அரங்கம் - 4 நாள்கள்).

* வார்தா புயல் காரணமாக - சென்னைத் தீவுத்திடலில் வழக்கமாக டிசம்பரில் தொடங்கப்படும் சுற்றுலாப் பொருட்காட்சி இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

* வறட்சி நிவாரணம் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதால், நாளை விவசாய சங்கங்கள் நடத்தவிருந்த மறியல் போரட்டம் கைவிடப்படுகிறது.

* மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பாதிப்புக்கு ஆளானதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் சார்பில் நாளை (5.1.2017) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கருநாடக மாநில அமைச்சர் மகாதேவ் பிரசாத் (வயது 58) மாரடைப்பால் மரணம்.

* புதுச்சேரி மாநில ணீமேனாள் அமைச்சர் நிரவி வி.எம்.சிவக்குமார் படுகொலை.

* திரிபுரா மாநிலத்தில் நேற்று நிலநடுக்கம்.

* பிரேசில் சிறையில் கலவரம் - 56 கைதிகள் படுகொலை.

* தேர்தலில் ருசியா தலையிடவில்லை என்கிறார் அமெரிக்கப் புதிய அதிபர் டிரெம்ப்.

* இந்தியாவில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் 107 கோடி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner