எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன. 5 எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் ராமர் கோயில் விவகாரத்தை பாஜக முன்னிறுத்தாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம்....

இதுகுறித்து டில்லியில் பிடிஅய் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தவரை, இதுவரை பாஜகவை ஆதரிக்காத சில தரப்பினர், தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உத்தரப்பிரதேச தேர்தலில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உத்தரப்பிரதேச தேர்தலைப் பொறுத்த வரை, பாஜக எந்த தனிப்பட்ட வியூகமும் வகுக்க வில்லை. சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி களின் ஆட்சிமுறைகளால் ஏற்பட்ட தீமைகளை மக்களுக்கு உணர வைத்தாலே போதும்.

முதல்வர் வேட்பாளரை...

உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் வளர்ச்சி என்பதையே பிரதானமான வாக்குறுதியாக பாஜக முன்வைக்கும். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தபோதிலும், இந்தத் தேர்தலில் அந்த விவகாரத்தை பாஜக முன் னிறுத்தாது. அதேபோல், முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தும் எண்ணமும் பாஜகவுக்கு இல்லை.

பிரதமர் மோடியை வளர்ச்சியின் நாயகனாக உத்தரப் பிரதேச மக்கள் பார்க்கிறார்கள். எனவே, இந்தத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவது உறுதி என்றார் வெங்கய்ய நாயுடு.

ராஜ்நாத்

இதனிடையே, உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் மத ரீதியிலான அரசியலை பாஜக முன்வைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘மதம், ஜாதியை முன்வைத்து வாக்கு கேட்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் சரியான தீர்ப்பு. அந்தத் தீர்ப்புக்கு இணங்கவே பாஜக செயல்படும்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner