எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*திருவள்ளுவர் தம் 1330 குறள்பாக்களுக்கு 13 மாணவிகள் இணைந்து சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் 30 மணிநேரம் நடனம் நடைபெற்றது.

*பொங்கல் விழாவையொட்டி ஒரு கோடியே 62 லட்சம் பேருக்கு இலவச வேட்டி - புடவை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

*நாடு முழுவதும் 70 இடங்களில் (தமிழ்நாட்டில் 17 இடங்களில்) வருமான வரித்துறை சோதனையை மேற்கொண்டது.

*கடந்த ஓராண்டில் மட்டும் ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டு 1,569.

*தமிழக மீனவர்கள் 61 பேரை விடுவிக்கவேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

*குழந்தைகளுக்குக் கதை சொல்ல - ஓர் இணைய தளம் www.tales of panchatantra.

*பெண் தொழில் முனைவோர்களுக்கு மூன்று நாள் இலவசப் பயிற்சி (தொடர்புக்கு http://women.tre.org.mentee register.html)

*தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டில் 2.04 கோடி வாகனங்கள்; 2016 டிசம்பர் 31 இல் 2.30 கோடியாக அதிகரித்துள்ளது.

*நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் முடிய ஏழு மாதங்களில் இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்தோர் 8,273.

*தேர்தலுக்கான வேட்பு மனுவில் பொய்யான தகவலைத் தந்தால் இரண்டாண்டு தண்டனை விதிக்கவேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம் (இப்பொழுது வெறும்

6 மாதமே!).

*தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக சோலார் மின்சார ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட - மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி விரைவு ரயில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner