எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன.7 வாஜ்பாய் தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சியில் (1998-1999 மற்றும் 2004 காலகட்டத்தில்), 32 சமூக கலாச்சார மற்றும் மத அமைப்புகளுக்கு அரசு நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.இதில்,22அமைப்புகள்ஆர்எஸ் எஸ்சின் கிளை அமைப்பு களாகும். 2004இல் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் கூட் டணி அரசு 29 அமைப்புகளுக்கு விதிமுறை மீறி நிலம் ஒதுக் கப்பட்டதாக கூறி ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, மோடி தலைமையில் மீண்டும் பாஜ அரசு பொறுப்பேற்றதும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இரு நபர் குழு அமைத்து விசாரித்தது.

அந்தக் குழு, அய்மு கூட் டணி அரசு நில ஒதுக்கீட்டை ரத்து செய்தது பாரபட்சமானது என அறிக்கை தந்தது. இதன் அடிப்படையில், நிலங்களை திருப்பித் தர மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் பரிந்து ரைத்ததின் பேரில், சமீபத்தில் அதற்கு அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமைச்சரவைஒப்புதல்அளித் துள்ளதைதொடர்ந்து,இது குறித்து டில்லி உயர்நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ள வழக்கில் குழுவின் அறிக் கையை மத்திய நகர்ப்புற அமைச்சகம்தாக்கல்செய்து, நில ஒதுக்கீட்டுக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner