எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நவீன வானியல் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட கலிலியோவின்  நினைவு நாள்  8 ஜனவரி 1642

கலிலியோ இத்தாலியில் குறுநில மன்னர்களின் பரம்பரை யில் வந்தவர்.  மருத்துவம் பயின்று கொண்டிருந்த கலிலியோ இதயத்துடிப்பு மற்றும் அதன் ஓசை குறித்த அளவை ஒப்பிடும் போது சீரான அலைவரிசையாக இருப்பதை கவனித்து அதைப் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார். அதன் நவீன வடிவமோ இன்று ஈசிஜி என்று அழைக்கப்படுகிறது,  அறிவியல் ஆர்வத்தின் காரண மாக முதல் வெப்பமானியை உருவாக்கினார்.

அதன் பிறகு அவர் வானியல் தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்துவந்தார். இக் காலகட்டத்தில்  மேலும் பருவ நிலை மாற்றங்கள் குறித்தும்  கண்டறிந்தார். பூமி  சூரியனை நீள்வட்ட வடிவில் சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை நிரூபித்தார்.

1623ஆம் ஆண்டு ரோம் நகரில் பொறுப்பேற்ற புதிய போப் அறிவியல் சிந்தனை உள்ளவராக இருந்த காரணத்தால் கலிலி யோவின் கண்டுபிடிப்புகள் மக்களிடம் சென்று சேர்வதை தடைசெய்யவில்லை, இதனால் கலிலியோ பல அறிவியல் நூல்களை எழுதி மிகவும் புகழ் பெற்றார்.  1632ஆம் ஆண்டு பொறுப்பேற்ற புதிய போப் கலிலி யோவின் கருத்துகள் அனைத்தும் கடவுளுக்கு விரோதமானவை என்று கூறி அவரது அனைத்து கண்டுபிடிப்புகள் மற்றும் அவர் எழுதிய நூல்களுக்கு தடை விதித்தார். அவரது நூல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. அவர் பொதுமக்களுக்காக வெனீஸ் நகர மலைக்குன்றில் நிறுவிய பெரிய விண்ணியல் தொலை நோக்கியும் உடைத்து நொறுக்கப்பட்டது.

கிறித்தவ சமய நம்பிக் கைகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் கத்தோலிக்க திருச் சபையால் தண்டனைக்கு உள் ளானார்.  அவரை வீட்டுக் காவ லில் வைக்க போப் உத்தரவிட்டார். இவர் வீட்டுக்காவலில் இருந்த போது பல்வேறு ஆய்வுகள் மற்றும் நூல்களை எழுதினார். அதில் முக்கியமானது இயக்க வியல் மற்றும் கோள்களின் சுழற்சி பற்றிய நூல்கள் முக்கியமானவை இந்த நூல்களை மிகவும் ரகசிய மாக தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி அங்கே வெளியிடவும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் இந்த நூல்கள் வெளி யானபோது அவரது பார்வைத் திறன் முழுவதுமாக பாதிக்கப் பட்டது. இறுதியில்  1642 ஜனவரி 8 இல், தன் 77 ஆம் அகவையில் இறந்தார்.

360 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை 1990ஆம் ஆண்டு நடந்தது. இந்த விசாரணையின் இறுதியில் பவுல் இரண்டாம் ஜான் போப் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி விஞ்ஞானி கலிலியோவைத் தண்டித் ததற்காக சபையில் மன்னிப்பு கோரினார்.

தவறு நேர்ந்துவிட்டது என்றும் ஒப்புக் கொண்டார். விஞ்ஞானத்தின் முன் எந்த மதமும் மண்டியிட்டே தீர வேண்டும் அல்லவா!

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner