எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மீரட், ஜன.8 மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக, முஸ்லிம் களுக்கு எதிராக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மக ராஜ் தெரிவித்துள்ள மறைமுக மான கருத்தால் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜ எம்பி சாக்ஷி மகராஜ் கலந்துகொண்டார்.  அப்போது பேசிய அவர்: ‘‘மக்கள் தொகை அதிகரிப் பதற்கு இந்துக்கள் காரண மில்லை. 4 மனைவிகள் மற் றும் 40 குழந்தைகள் என வாழ் வோர்தான், மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணமாவர். நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை” என்றார்.

மக்கள் தொகை பெருக்கத் துக்கு முஸ்லிம்கள்தான் கார ணம் என சாக்ஷி மகராஜ்  மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.  இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மீரட் மாவட்ட நிர்வாகத்துக்கு தேர் தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதை தொடர்ந்து, ‘‘கூட்டத்தில் நான் இது போன்ற கருத்தை கூறவில்லை’’ என சாக்ஷி மறுப்பு தெரிவித்துள் ளார். அவர் கூறுகையில், “நாம் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் இயந்திரங்கள் இல்லை. எனவே தான் 4 மனைவி 40 குழந்தைகள் மூன்று தலாக் போன்றவற்றை இனியும் நாம் ஏற்றக்கொள்ள வேண்டிய தில்லை என கருத்து கூறியிருந் தேன்” என்றார்.

இதற்கிடையே சாக்ஷி மகராஜ் மீது மீரட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner