எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எரித்துக் கொல்லப்பட்டது ஏன்?

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாடி சமுத்திரம் காலனியைச் சேர்ந்த சதீஷ் (வயது 23) 4.1.2017 அன்றிரவு ரசபுத்திரப்பாளையம் ஏரிப் பகுதியில் மின் கம்பம் ஒன்றில் லுங்கியால் கட்டி வைக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். எரிந்த நிலையில் குடியிருப்புப் பகுதிக்கு ஓடிவந்து மயங்கி விழுந்துள்ளார் - மரணமடைந்துள்ளார்.

இதன் காரணம் என்ன? பின்னணி என்ன? சில குறிப் பிட்ட வட்டாரங்களில் தாழ்த்தப்பட்டோர் இப்படிக் கொடுமைப் படுத்தப்படுவது ஏன்?

காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமா? குற்றவாளி சட்டத்தின்முன் நிறுத்தப்படுவானா? தாமதம் ஆக ஆக விபரீதங்களுக்குத்தானே வழிவகுக்கும்.

ஏனிந்த அநாகரிகத் தாக்குதல்?

சென்னை மாநகரக் காவல்துறை ஏன் இப்படி நடந்து கொண் டது? மத்திய பி.ஜே.பி. அரசின் ரூபாய் மதிப்பு அறி விப்புத் தொடர்பாக மக்கள் நலன் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறை அடக்கிய முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்குக் காவல்துறையினர் பாலியல் தொல்லைகளைக் கொடுத்தது சரியா? வேலியே பயிரை மேயலாமா? மாநகரக் காவல்துறை ஆணையரைச் சந்தித்து இதுகுறித்து புகார் மனுவும் கொடுத்துள்ளனர். மாநகர காவல்துறை ஆணையர் உரிய நடவடிக்கையை எடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

நடைபெற்றுள்ள சம்பவம் வெட்கித் தலைகுனியத்தக்கதே!

பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமைகளைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது - கிடையவே கிடையாது!

சமூக அநீதி தளமா?

சமூக வலைத்தளம் என்பது மலிவாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நவீன கருவி. இது இப்பொழுது அநீதிக்கும், ஆபாசத்துக்கும் அடைக்கலமாவது கண்டிக்கத்தக்கது. பந்தை அடிக்க முடியவில்லையென்றால், காலை அடிப்பது என்ற கெட்ட விளையாட்டுபோல சமூக வலைதளங்கள் பெரும்பாலும் பயன்படுகின்றன.

தமிழக காங்கிரசு செய்தித் தொடர்பாளராக இருக்கக்கூடிய சகோதரி ஜோதிமணி சமூக வலைத்தளங்களில் தம் கருத் தைப் பதிப்பதில் முன்னணியில் உள்ளவர். அவர் பெண் என்ற காரணத்தால், ஆபாசச் சேற்றை வாரி இறைக்கும் வகையில் புழுபுழுத்த முறையில் சமூக வலைத்தளங்களில் கொச்சைத்தனமாக எழுதலாமா?

இதைப்போலவே இந்திய மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சகோதரி  உ.வாசுகி மீதும் இதே பாணியில் கயவர்கள் காலித்தனமாக எழுதி வருவது கண்டிக்கத்தக்கது.

பெண்கள் பொதுவாழ்வில் வரக்கூடாது என்ற நினைப்பா? இவற்றையெல்லாம் கடந்த  அவர்கள் களத்தில் உறுதியாக நிற்கவேண்டும் - நிற்பார்கள் என்றே உறுதியாக நம்புகிறோம்.

இந்த ஆபாசத்தின் பின்னணியில் காவிகளின் கைவண்ணம் இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அவர்களின் தரம் அப்படி? இந்து மதக் கடவுள்களே ஆபாசத்தின் ஊற்றுதானே!

‘சைபர் கிரைம்‘ என்ற ஒரு பிரிவு காவல்துறையில் இருக்கிறது; அது என்ன செய்கிறது என்பது முக்கியமான கேள்வியாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner