எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பருவ மழை குறைவு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்றவற்றால் தமிழக பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை உருவாகும்

சென்னை, ஜன.9 வடகிழக்கு பருவமழை குறைவு, மாநில வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை, பண மதிப்பு நீக்க நட வடிக்கை போன்றவற்றால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை உருவாகும் என நிபுணர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 28- ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 62 சதவீதம் குறைந்துள்ளது. ஜுன்மாதத்திலிருந்து தமிழகத்திற்குக் காவிரி தண்ணீர் கிடைக்கும் அளவும் குறைந்துள்ளது.

இதனையடுத்து, நீண்டகால அடிப் படையில் சம்பா பயிரிடும் பரப்பளவு மிகவும் சரிவடைந்துள்ளது. கடந்த 2013-20-14-ஆம் ஆண்டு நிதியாண்டிலிருந்து மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி மந்தமாக உள்ளது. அந்த நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் ரூ. 83,061.38 கோடியாக இருந்தது. இது 2014--2015ஆம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரம் கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. 2015--2016 ஆம் ஆண்டு நிதியாண்டில் இது ரூ.95,470 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இது ரூ.1.19 லட்சம் கோடியாக உயரும் என தமிழக அரசு ஏற்கெனவே மதிப்பீடு செய்துள்ளது. இந்த மதிப்பீட்டை ஜூலை மாதத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடியாக தமிழக அரசு குறைத்தது. இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருவாய் மேலும் சரிவடையும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்

இதுகுறித்து, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி கூறுகையில்,

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தேசிய மற்றும் மாநில அளவில் பொரு ளாதார வளர்ச்சி குறையும். இதற்கு தமிழ்நாடு மாநிலமும் விதிவிலக்கல்ல. இது மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் தமிழ்நாடு மாநிலத்தின் வருவாய் குறையும்.இலவச திட்டங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு மாநில வருவாய்தான் ஈடு கொடுக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் தொழில் நிலவரமும் திருப்திகரமாக இல்லை. இதுபோன்ற காரணங்களால் தமிழக பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலைமை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ இயக்குநர்

மேலும், தமிழக பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை உருவாகும் என்று ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ இயக்குநர் கே.ஆர் சண்முகமும் கருத்து தெரிவித்துள்ளார்.எனினும், பொருளாதார வளர்ச்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைபொய்க்கும்போது,மாநிலத் தின் வேளாண் துறை உற்பத்தி வீழ்ச்சி யடைந்து இது தொழிற்துறையிலும் தாக் கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி சரிவடைவது தவிர்க்க முடியாதது. இதர மாநிலங்களிடம் ஒப்பிடும்போது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழக வருவாய் 10 சதவீதம் (ரூபாய் 10 ஆயிரம் கோடி)குறையும் என மாநில திட்டக்கமிஷனின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.கள் அதிகஅளவில் அமைந்துள்ளதால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பை இதர மாநிலங்களுடன் ஒப் பிடும்போது தமிழக அரசால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆக, ஒட்டு மொத்தத்தில்வருவாய் வளர்ச்சியில்ஏற்படும்தேக்கநிலையை தமிழகஅரசு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner