எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* 2016 ஆம் ஆண்டில் ரயில் பாதையில் மரணமடைந்தோர் 1,297.

* தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரிப்பு (கரூர் பரமத்தியில் 34 டிகிரி செல்சியஸ்).

* இந்தியாவின் வளர்ச்சிக்கு மதச்சார்பின்மை மிகவும் அவசியம் என்றார் ‘இந்து’ என்.ராம்.

* சென்னையில் அடுத்தகட்டமாக 114 கி.மீ. தொலைவுக்கு 3 புதிய வழித் தடங்கலில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும்.

* வீராணம் குழாய் உடைந்து குடிநீர் விரயம்!

* திருவள்ளூர் மாவட்டத்தில் 103 கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கடும் வறட்சியால் பாதிப்பு.

* நாகூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்திய 30 பேர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதின் உள்பட 30 பேர் கைது.

* சர்வதேச காரணங்களால் தங்க முதலீடு செய்வதில் எச்சரிக்கை தேவை எனக் கூறப்படுகிறது.

* கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த தேன்கனிக்கோட்டைப் பகுதியில் இன்னும் தண்டோரா போட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

* வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அமைச்சர்களின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

* வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 பொது இடங்களில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் குப்பைத் தொட்டியாம்! (குப்பைத் தொட்டி பத்திரம்!).

* வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஜூன் 30 ஆம் தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner