எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர்தம் பண்பாட்டு விழாவான

பொங்கலுக்கு விடுமுறை மறுப்பதா?

மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 12 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில்

திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழர் தலைவர் அறிவிப்பு

மதச்சார்பற்ற விழாவான பொங்கல் விழாவிற்கு இது வரை இருந்துவந்த மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து, வேண்டுமானால் தேவைப்படுவோர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. தமிழர் பண்பாட்டின் மீது திணிக்கப்படும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே இது. மத்திய அரசின் இந்துத்துவா கொள்கையின் இன்னொரு வகை திணிப்பும் ஆகும்.

உடனடியாக மத்திய அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று அறிவிக்கிறோம். ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

- கி.வீரமணி

தலைவர்,            திராவிடர் கழகம்.

சென்னை
9.1.2017  

குறிப்பு: மத்திய அரசு பொங்கல் விடுமுறை ரத்து என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றதால், போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner