எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சமூக நீதிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒருமித்தக் குரலில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி 'நீட்' தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணப் படை அய்ந்து குழுக்களாக  தமிழகத்தின் அய்ந்து முனைகளிலிருந்து மார்ச் 18ஆம் தேதி புறப்பட்டு மார்ச் 21ஆம் தேதி விருத்தாசலத்தை வந்தடையும் மார்ச் 21ஆம் தேதி விருத்தாசலத்தில் பரப்புரை பயணத்தை முடித்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் பிரச்சாரப்படை காலை 9 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு நிறைவடையும்.

பயண ஏற்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள்:

1. வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

2. இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

3. த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)

4. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணிச் செயலாளர்)

குறிப்பு: அந்தந்த மாவட்ட இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் வாகனப் பேரணியை தங்கள் மாவட்ட எல்லையில் வரவேற்று, வாகனப் பேரணி உடன் இருசக்கர வாகனங்களில் தங்கள் மாவட்ட எல்லை முடியும் வரை வரவேண்டும்.

- திராவிடர் கழக இளஞரணி, மாணவரணி

தலைமை நிலையம், சென்னை

முதல் குழு (1)

தாம்பரம் முதல் விருத்தாசலம் வரை

பிரச்சார படை ஒருங்கிணைப்பாளர்:  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்)

பிரச்சார படை தலைமை:  சென்னை. நா.பார்த்திபன் (மாநில மாணவரணி துணை செயலாளர்)

விளக்கவுரை:  பா.மணியம்மை (சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர்)

பிரச்சார படையை தொடங்கி வைப்பவர்:  மானமிகு வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).

18.03.2017

தாம்பரம் (தொடக்கம்), ஈக்காட்டுத்தாங்கல், (தென் சென்னை), தாணா தெரு (வடசென்னை), அம்பத்தூர், ஆவடி  (மதிய உணவு), திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி  (இரவு தங்கல்).

19.03.2017

அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காஞ்சிபுரம்  (மதிய உணவு), செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி, திமிறி, ஆர்க்காடு, வேலூர்  (இரவு தங்கல்)

20.03.2017

கண்ணமங்கலம் கூட்டு ரோடு, போளூர், திருவண்ணாமலை  (மதிய உணவு), செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி  (இரவு தங்கல்)

21.03.2017

கண்டமங்கலம், வளவனூர், விழுப்புரம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை  (மதிய உணவு), மங்கலம்பேட்டை, விருத்தாசலம்  (நிறைவு).

இரண்டாம் குழு (2)

தருமபுரி முதல் விருத்தாசலம் வரை

பிரச்சார படை ஒருங்கிணைப்பாளர்:  ஆத்தூர். அ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

பிரச்சார படை தலைமை:  தர்மபுரி த.யாழ்திலிபன் (மாநில மாணவரணி துணை செயலாளர்)

விளக்கவுரை:  தெற்குநத்தம். வே.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாவட்ட மாணவரணித் தலைவர்)

பிரச்சார படையை தொடங்கி வைப்பவர்:  இரா.குணசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்)

18.03.2017

தருமபுரி  (தொடக்கம்), காரிமங்கலம், காவேரிபட்டினம், கிருட்டிணகிரி, பர்கூர், திருப்பத்தூர்  (மதிய உணவு), மத்தூர், ஊற்றங்கரை  (இரவு தங்கல்)

19.03.2017

அனுமந் தீர்த்தம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்டுரோடு, அயோத்தி யாபட்டினம், சேலம், குள்ளகவுண் டனூர்  (மதிய உணவு), ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி  (இரவு தங்கல்)

20.03.2017

சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல்  (மதிய உணவு), ராசிபுரம், மெட்டாலா, திம்மண்நாயக்கன்பட்டி, வாழப்பாடி, புத்திரகவுண்டன் பாளையம், பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர்  (இரவு தங்கல்)

21.03.2017

தலைவாசல், வீரகனூர், எசனை, பெரம்பலூர்  (மதிய உணவு), தொழுதூர், ஆவட்டி, வேப்பூர், விருத்தாசலம்  (நிறைவு)

மூன்றாம் குழு (3)

கோவை முதல் விருத்தாசலம் வரை

பிரச்சார படை ஒருங்கிணைப்பாளர்:  கோவை. ஆ.பிரபா கரன் (மாநில மாணவரணி துணை செயலாளர்)

பிரச்சார படை தலைமை:  ஈரோடு. தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

விளக்கவுரை:  பழனி. சே.மெ.மதிவதனி (மாநில மாண வரணி கூட்டுச் செயலாளர்)

பிரச்சார படையை தொடங்கி வைப்பவர்:  இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

18.03.2017

குறிச்சி - கோவை  (தொடக்கம்), வடகோவை, பெரிய நாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம்  (மதிய உணவு), அன்னூர், அவினாசி, திருப்பூர்  (இரவு தங்கல்)

19.03.2017

பெருமாநல்லூர், குன்னத்தூர், நம்பியூர், குருமந்தூர், கரட்டடிப்பாளையம், கோபி  (மதிய உணவு), கவுந்தப்பாடி, பவானி, ப.குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு  (இரவு தங்கல்)

20.03.2017

காங்கேயம், வெள்ளக்கோவில், பரமத்தி, கரூர்  (மதிய உணவு), தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், இலால்குடி  (இரவு தங்கல்)

21.03.2017

புள்ளம்பாடி, கீழப்பழூர், அரியலூர்  (மதிய உணவு), செந்துறை, பெண்ணாடம், விருத்தாசலம்  (நிறைவு).

நான்காம் குழு (4)

தென்காசி முதல் விருத்தாசலம் வரை

பிரச்சார படை ஒருங்கிணைப்பாளர்:  இல.திருப்பதி (இராஜபாளையம் மாவட்ட தலைவர்)

பிரச்சார படை தலைமை:  மதுரை. எ.பிரபாகரன் (மாநில மாணவரணி துணை செயலாளர்)

விளக்கவுரை : குடந்தை ச.அஜிதன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்)

பிரச்சார படையை தொடங்கி வைப்பவர்:  சி. டேவிட் செல்லதுரை (தலைமை செயற்குழு உறுப்பினர்)

18.03.2017

தென்காசி  (தொடக்கம்), புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, இராஜபாளையம்  (மதிய உணவு), திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை  (இரவு தங்கல்)

19.03.2017

நாகமலை புதுக்கோட்டை, செல்லம்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப் பட்டி, தேனி (மதிய உணவு), பெரியகுளம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல்  (இரவு தங்கல்)

20.03.2017

வடமதுரை, மணப்பாறை, திருச்சி  (மதிய உணவு), திருவெறும்பூர், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சாவூர்  (இரவு தங்கல்)

21.03.2017

கண்டியூர், மாத்தூர், அய்யம்பேட்டை, பாபநாசம், சுவாமி மலை, அரசூர் (கும்பகோணம்), நீலத்தநல்லூர், ஜெயங் கொண்டம்  (மதிய உணவு), ஆண்டிமடம், கருவேப்பிலங் குறிச்சி, விருத்தாசலம்  (நிறைவு)

அய்ந்தாம் குழு (5)

கடலூர் முதல் விருத்தாசலம் வரை

பிரச்சார படை ஒருங்கிணைப்பாளர்:  உரத்தநாடு இர.தர்ம சீலன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

பிரச்சார படை தலைமை :  விருத்தாசலம். பா.வெற்றிச் செல்வன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

விளக்கவுரை : காட்டுமன்னார்குடி சு.பெ.தமிழமுதன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்)

பிரச்சார படையை தொடங்கி வைப்பவர்:  துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

18.03.2017

கடலூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரம்  (மதிய உணவு), சீர்காழி,  மயிலாடுதுறை, பேரளம், சன்னாநல்லூர், திருமருகல்,  நாகூர், நாகப்பட்டினம்  (இரவு தங்கல்)

19.03.2017

திருக்குவளை, திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரமணி (மதிய உணவு) ஆவணம், கைகாட்டி, கீரமங்கலம், அறந்தாங்கி  (இரவு தங்கல்)

20.03.2017

புதுவயல், காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை  (மதிய உணவு), ஆலங்குடி, கறம்பக்குடி, திருவோணம், உரத்தநாடு, ஒக்கநாடு கீழையூர், மன்னார்குடி  (இரவு தங்கல்)

21.03.2017

கூத்தாநல்லூர், கமலாபுரம், திருவாரூர், குடவாசல், கும்ப கோணம்  (மதிய உணவு), சோழபுரம், திருப்பனந்தாள், மீன் சுருட்டி, சேத்தியாதோப்பு கூட்டு, கம்மாபுரம், விருத்தாசலம்  (நிறைவு)

மாவட்ட கழக பொறுப்பாளர்கள் செய்ய வேண்டியவை

1.            அந்தந்த மாவட்ட இளைஞரணி, மாணவரணி பொறுப் பாளர்கள் வாகனப் பேரணியை தங்கள் மாவட்ட எல்லை யில் வரவேற்று, வாகனப் பேரணி உடன் இருசக்கர வாகனங்களில் தங்கள் மாவட்ட எல்லை முடியும் வரை வர வேண்டும்.

2.            மதிய, இரவு உணவு, இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.

3.            மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறுதல்.

4.            பரப்புரை பயணம் செல்லும் வழிகளில் விளம்பரம் செய்தல்.

5. ஒத்த கருத்துடையோரை ஒருங்கிணைத்து பிரச்சார படையை வரவேற்றல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner