அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படவிருக்கிறது என்கிற மகிழ்ச்சிகரமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் அய்யா விழா அமர்க்களமாக நடைபெற கழகத் தோழர்கள் இப்பொழுது முதற்கொண்டே தக்க விளம்பரங்கள் மூலம் எழுச்சியை ஏற்படுத்திடவேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளும் வகையில் மக்கள் விழாவாக அமையும் வகையில் தவறாமல் தந்தை பெரியார் பட ஊர்வலத்தை நடத்திட, ஆவன செய்ய வேண்டுமாய்க் கழகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
3.9.2018