எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.3 பாஜ ஆட்சியில் கடன்களை வசூலிக் காத காரணத்தால் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள் ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டத்தால், இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பண மதிப்பிழப்பு திட்டம் மிகப்பெரும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. இத்திட்டத்தால் மிகப்பெரும் பணமுதலைகள்தான் பயன் பெற்றனர்.   ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவு பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த அராஜக ஆட்சிக்கு வரும் 2019-ஆம் ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். பிரதமர் மோடி, காங்கிரசு ஆட்சியில் கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை என குற்றம் சாட்டுகிறார். ஆனால், காங்கிரசு ஆட்சியில் வசூலிக்கப்பட வேண்டிய கடனைவிட 12 மடங்கு அதிக மான கடன்கள் பாஜ ஆட்சியில் வசூலிக்கப்படவில்லை.

இதனால் பல வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளன. இக்கடன்களின் பெரும்பகுதி பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, அதானி உட்பட பல பெரும் பணமுதலைகளுக்கு இவர்கள் கொடுத்த கடன்களாகும். இந்த வராக்கடன்களை வசூல் செய்யாமல், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? அவர்களின் தோல்வியை மறைத்து, திசைதிருப்புவதற்காக தற்போது காங்கிரசு ஆட்சியின்மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஊபா சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி வலியுறுத்தல்

சென்னை, செப்.3 ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ஊபா சட்டத்தை திரும்பபெற நாடு முழுவதும் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியுள்ளார். மக்கள் உரிமை கழகத்தின் சார்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், அரிபரந்தாமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி, மும்பை, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சோதனை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் என்று குற்றம்சாட்டி சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை காவல்துறையின் கைது செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் 5 பேரும் சிறையில் அடைக்கப்படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு வரும் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை திருமுருகன் காந்தி, வழக்குரைஞர் முருகன் ஆகியோர் மீது ஊபா வழக் குகள் போடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் கைதுசெய்யப்பட்டால் 6 மாதத்துக்கு பிணையில் வெளியே வர முடியாது. சமூக செயற்பாட்டாளர்கள் மீது இந்த சட்டத்தை பயன்படுத்தி கைதுசெய்வது குரல்வளையை நெரிக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊபா சட்டத்துக்கு எதிராகவும், திரும்பபெறவும் நாடு முழுவதும் குரல்கள் எழுந்துள்ளது. இந்த குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.  இவ்வாறு கூறினார்.

தொழில்திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னை, செப். 3 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான கல்வி மற்றும் தொழிற்துறை தரநிலைகளுக்கு இடையிலான இடைவெளியை பிணைக்கும் பாலமாக டைம்ஸ் புரோ (ஜிவீனீமீs றிக்ஷீஷீ) பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த பாடத்தை பல நகரங்களிலும் வங்கி, நிதி, வணிகம் போன்ற பல துறைகளில் உள்ள பல்வேறு தளங்களிலும் மாணவர்களுக்கு வழங்கியது மூலம் அவர்கள் பணி வாய்ப்பைப் பெற்றதின் மகிழ்வாக அவர்களை சிறப்பிக்கும் விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள ‘டைம்ஸ் புரோ' திறன் பயிற்சி மய்யத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புருயத் இன் சைட்ஸ் குளோபல் நிறுவன கூட்டு இயக்குநர் உமாசங்கர் கந்தசாமி, டைம்ஸ் புரோஃப சனல் கற்றல் மய்ய துணத்தலைவர் சிறீதர் ஆகியோர் பங்கேற்று வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெற்ற மாணவர்களை சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner