எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மலேசியாவில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டுஅய்ந்து அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் திறப்பு!

லேசியா, செப்.3 செலங்கூர் மாநிலம், காப்பர் அருகில் அமைந்துள்ள ஜாலான் ஆக்கோப் தோட்ட அரசு தமிழ்பள்ளியில் பெரியார் நூலகம் அமைக்கப்பட்டது.  சுமார் இருநூறு மாணவர்கள் இந்த பள்ளியில் பயில்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் திருமதி சாந்த குமாரி முன்னிலை வகித்தார். திராவிட இயக்க பணியாளரும், விவசாயிகள் நிர்வாகிகள் சங்க தலைவருமான மானமிகு மு.கோவிந்தசாமி நூலகத்தை திறந்து வைத்து உரைநிகழ்த்தினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் அய்ந்து ஊர்களில் உள்ள அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். அந்நூலகங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் செலுத்தப்பட்டது.

திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், இரா.பெரியசாமி, கு.க. இராமன், பெற்றோர்கள், ஆசிரியைகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner