எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 3- பாகிஸ் தானின் பிரதமர் அலுவலகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்களை ஏலத் துக்கு விட, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நாட்டில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிலி ருந்து வெளியாகும் “தி டாண்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

இசுலாமாபாதில் உள்ள பிர தமர் அலுவலகத்தில், தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாக னங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 17-ஆம் தேதி இதற்காக ஏலம் விடப்படவுள் ளது. அந்த ஏலத்தில் இடம் பெறவிருக்கும் வாகனங்களுக் கான பட்டியலும் தயாராகிவிட் டது.

அதன்படி, 8 பிஎம்டபிள்யூ சொகுசுக் கார்கள், 5000 சிசி கொண்ட 3 ஸ்போர்ட்ஸ் பயன் பாட்டு வாகனங்கள், 3000 சிசி கொண்ட 2 வாகனங்கள் இடம் பெற்றுள்ளன.

2016-ஆம் ஆண்டில் தயாரிக் கப்பட்ட 4 மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசுக் கார்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள் ளன. அவற்றில் இரு கார்கள் குண்டு துளைக்க முடியாதவை ஆகும்.

இதுமட்டுமின்றி, டொயோட்டா நிறுவனத்தின் 16 உயர் வகைக் கார்களும் ஏலத்துக்கு விடப்படவுள்ளன.

இத்துடன், குண்டு துளைக்க முடியாத 4 லேண்ட் க்ரூஸர் வாகனங்களும் வரும் 17-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன.

ஒரு ஹோண்டா சிவிக் கார், 3 சுசுகி வாகனங்கள், ஒரு ஹினோ பேருந்து ஆகியவை யும் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner