எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 3- பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து “தி டான்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பலூசிஸ்தான் மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு  தஹிரா சப்தார் என்ற பெண் தேர்ந்தெடுக் கப்பட்டார். பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. பலூசிஸ்தான் மாகாண ஆளுநர் மாளிகையில் சனிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாகணத்தின் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் பதவிப் பிர மாணம் செய்துகொண்டார். பலூசிஸ்தானின் முதல் சிவில் நீதிபதியாக கடந்த 1982-ஆம் ஆண்டு தஹிரா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  குவெட்டா நகரில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த தஹிரா, உருது இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றது

கொழும்பு, செப். 3- வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்க தேசம், பூடான், மியான்மா, நேபாளம், இலங்கை, தாய் லாந்து ஆகிய நாடுகள் பல் வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப் புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிம்ஸ்டெக் மாநாடு, இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தலைமை வகித்த நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 4-ஆவது பிம்ஸ்டெக் மாநாடு நடந்து முடிந்தது.

இதைதொடர்ந்து, வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது, நேபாள பிரதமர் சர்மா ஓலி முறைப் படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் பிம்ஸ் டெக் அமைப்பில் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். அதன்படி 5-ஆவது பிம்ஸ்டெக் மாநாடு அடுத்த அண்டு இலங்கையில் நடைபெற உள்ளது. பிம்ஸ்டெக் அமைப்பிற்கு புதிதாக தலைமை ஏற்றுள்ள இலங்கைக்கு இந்தியா, வங்க தேசம், பூடான், மியான்மா, நேபாளம், மற்றும் தாய்லாந்து நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner