எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 3- தமிழகத்தில், முதல் முறையாக, மின் வினி யோகம் செய்யும் உரிமையை தனியாருக்கு வழங்கி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மின் தொட ரமைப்பு கழகம் என, இரு நிறுவனங்களாக செயல்படுகி றது. தமிழகத்தில், மின் வாரி யத்திற்கு இருப்பது போல, தனியார் நிறுவனங்களுக்கும், மின் நிலையங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள், தங்களின் மின் நிலையங்களில் உற்பத்தி யாகும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு போக, மின்வாரியத் திற்கு விற்கின்றன.

வீடு, தொழிற்சாலை, வணி கம், விவசாயம் என, அனைத்து பிரிவினருக்கும், மின் வினி யோகம் செய்யும் உரிமை, மின் பகிர்மான கழகத்திற்கு மட் டுமே உள்ளது. இந்நிலையில், முதல் முறையாக, நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அமைய உள்ள சிறப்பு பொரு ளாதார மண்டலத்திற்கு, மின் வினியோகம் செய்யும் உரி மையை, 'இந்தியா பவர் கார்ப் பரேஷன்' என்ற, தனியார் நிறு வனத்திற்கு வழங்கி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத் தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாங்குநேரியில், ஏ.எம்.ஆர். எல்., நிறுவனம், 2,518 ஏக்க ரில், சிறப்பு பொருளாதார மண் டலம் அமைக்க உள்ளது. இதற் காக, அந்நிறுவனம், 'இந்தியா பவர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய் துள்ளது. இதன் வாயிலாக, இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தொழில் துவங்கும் நிறுவனங் களுக்கு, மின் வினியோகம் செய்ய, ஆணையத்திடம் அனு மதி கோரியது.

இதுதொடர்பாக, மின் வாரி யம் உட்பட, மாநில ஆலோசனை குழுவின் கருத்துகள் கேட்கப்பட்டன. 'மின் சட்டப் படி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் துவக்கப்படும் நிறுவனங்களுக்கு, மின் வினி யோகம் செய்ய, தனியாருக்கு அனுமதி உள்ளது. அதனால், எதிர்க்கவில்லை. 'தேவையை விட, எங்களிடம் அதிக மின் சாரம் உள்ள நிலையில், தனி யாருக்கு அனுமதி வழங்கி னால், புதிய நுகர்வோரை இழக்க நேரிடும்' என, மின் வாரியம் தெரிவித்தது.

தனியார் நிறுவனம் மின் வினியோகம் செய்ய ஆட்சேப னைகள் வராததால், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்ட லத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, 2017 ஏப்., 19 முதல், 2042 ஏப்., 18 வரை, 25 ஆண்டுகளுக்கு, மின் வினி யோகம் செய்ய, இந்தியா பவர் கார்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம், மின் வாரி யத்தை விட குறைந்த கட்ட ணத்தில், மின் வினியோகம் செய்ய வாய்ப்புள்ளது. எந்த விலைக்கு, மின்சாரம் விற்க வேண்டும் என்பதை, ஆணை யம் ஆண்டு தோறும் நிர்ணயம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner