எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 3- நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதா வது: நடப்பாண்டு ஜூன் மாதத் தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.95,610 கோடி வசூல் செய்யப்பட்டது. ஜூலை மாதத் தில் இந்த வசூல் ரூ.96,483 கோடியாக அதிகரித்து காணப் பட்டது.

இந்த நிலையில், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.93,960 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு, வரி குறைப்பின் பலன்களை பெற வேண்டும் என்பதற்காக நுகர் வோர்கள் பொருட்கள் வாங் கும் திட்டத்தை ஒத்திப் போட் டதே முக்கிய காரணமாகும். ஜூலை 21-இல் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட் டன. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த வரிக் குறைப்பின் பயன்கள் நுகர்வோரை சென்ற டைவதற்கு காலதாமதம் ஆகி யிருக்கும். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதின் உண்மை யான பின்விளைவுகள் அடுத்த மாதத்திலிருந்துதான் தெரிய வரும்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner