எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 3- இது சுற்றுலா வந்து செல்லும் இடமில்லை. இதுபோல் நடந்து கொள்ளாதீர் கள் என வருமான வரித்துறையை உச்ச நீதிமன்றம் மிக கடுமை யாக சாடியுள்ளது.

உத்தரப் பிரதேச நகர்புற திட்டமிடல் மற்றும் அபிவி ருத்தி துறையின் கீழ் செயல் படும் ஹாபூர் பில்குவா மேம் பாட்டு ஆணையத்தின் வருமான வரி கணக்கு தாக்கல் ஒழுங்கு இல்லாமல் இருந்தது குறித்து அதற்கு வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கை அனுப்பப் பட்டது. ஆனால், தாங்கள் வரி விலக்கு அளிக்கக் கோரி காசிய பாத் வருமான வரித் துறை ஆணையரிடம் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூனில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. ஆனால் இதை வருமான வரித்துறை நிராகரித்தது.

இதனை எதிர்த்து ஆணை யம் சார்பில்,  வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் அதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற மும் இதனை தள்ளுபடி செய்த தால் உச்ச நீதிமன்றத்தில் வரு மான வரித்துறை சார்பில் 596 நாட்கள் கழித்து மேல்முறை யீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே மேல்முறையீடு வழக்கு ஒன்று கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதி பதிகள் அமர்வு, 596 நாட்கள் தாமதமாக வருமான வரித் துறை மேல்முறையீடு செய்துள்ளது. கால தாமதத்திற்கான போதுமான மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கமும் அளிக்கப்படவில்லை. வருமான வரித்துறை, இந்த விவ காரத்தில் இவ்வளவு அசட்டை யாக இருந்துள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள். உச்ச நீதிமன்றம் சுற்றுலா வந்து செல்வதற்கான இடமில்லை. நாட்டின் உச்ச நீதிமன்றத்திடம் நடந்து கொள்ளும் வழிமுறை இதுதானா? உச்ச நீதிமன்றத் திடம் இனி வரும் நாட்களில் இதுபோன்று நடந்து கொள் ளாதீர்கள். 2016ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் 2012ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தவறான அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற் காக வருமான வரித்துறை ரூ.10 லட்சத்தை அபராதமாக நீதிமன் றத்தின் சட்ட சேவை கமிட்டி யின் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை சிறார் நீதி பிரச்சினைகளுக்காக செலவிடப்படும் என்று உத்தர விட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner