எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு!

புதுடில்லி, செப். 3- சுதந்திர தின நாள் பேச்சின் போது மோடி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த காப்பீட்டின்படி உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் நலி வுற்றோருக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார்.

"ஜன ஆரோக்ய யோஜனா'' என்னும் அந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனியார் மருத்து வமனைகளுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் குறித்து திட்ட அதிகாரிகள் அறிக்கை அளித் துள்ளனர். அந்த அறிக்கை மருத் துவ மனைகளிடையே ஏமாற் றத்தை உருவாக்கியுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்திய மருத்துவர் சங்க தலைவர் அசோகன் கூறு கையில், இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் சாதாரண மற்றும் நடுத்தர மருத்துவமனை கட்டணங் களை விட மிகவும் குறைவா கவே உள்ளன. ஒவ்வொரு சிகிச்சையும் தனித்தனியாகப் பார்க்கும்போது வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் 25 விழுக்காடு மட்டுமே இந்த அறிக்கையில் குறிப் பிடப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி இவ் வளவு குறைவான தொகைக்கு சிகிச்சைகள் அளித்தால் மருத்து வமனைகள் கடும் இழப்புக்கு ஆளாகும். அதனால் மருத்துவ மனைகள் மூடப்பட்டு மருத் துவ சேவையில் கடும் பாதிப்பு உண்டாகும். அதனால் பல தனியார் மருத்துவமனைகள் இந்த காப்பீட்டு திட்டத்தினுள் வர மறுக்கக் கூடும்'' என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மருத்துவமனைகளை மூடி விட்டு அவற்றை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் மருத் துவமனைகள் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் வரு வதற்காக கட்டாய விதிமுறை கள் எதுவும் விதிக்கவில்லை. இதனால் பல தனியார் மருத்து வமனைகள் மோடியின் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராது. அப்படி இருக்க மோடியின் மருத்துவக் காப் பீட்டு அறிக்கை அவரது எப் போதையும் போல ஒரு பொய் யான அறிக்கையாகவே முடியும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner